பறக்கும் நாற்காலிகள் : மாஜி முதல்வர் -எம்எல்ஏ ஆதரவாளர்கள் அடிதடி வீடியோ
முன்னாள் முதல்வர் ஆதரவாளர்களுக்கும், எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் நாற்காலிகளை தூக்கி அடித்துக் கொண்டனர். பந்தலை பிரித்து வீசினர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சத் பூஜையை முன்னிட்டு சிட்கோரா நகரில் இருக்கும் சூரிய கோவிலில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ரகுபர் தாசிம் தொண்டர்கள் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே போல் பாஜக முன்னாள் உறுப்பினராக இருந்து பின்னர் தனியாக பிரிந்து சென்ற எம்எல்ஏ சூரியகிராய் சூரியா ராய் என்பவர் தாசின் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த பகுதிக்கு அருகே பக்தர்களின் வசதிக்காக இன்னொரு முகாம் ஒன்றையும் அமைத்திருக்கிறார்.
இதனால் இரு தரப்பு தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சண்டை முற்றியதும் முகாமை கிழித்து தூர வீசி இருக்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை ஒருவருக்கொருவர் தூக்கி வீசி மோதலில் ஈடுபட்டுள்ளனர். நாற்காலிகள் இருதரப்பிற்கும் இடையே அந்தரத்தில் பறக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பல தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வன்முறை பரவவிடாமல் தடுக்கும் வகையில் போலீசார் அதிக அளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Jharkhand: Clash broke out b/w supporters of MLA Saryu Rai & ex-CM & BJP leader Raghubar Das over organising #ChhathPuja at Surya Mandir in Sidhgora. Rai supporters had reportedly set up a camp for devotees close to venue of Das supporters' event following which clash broke out. pic.twitter.com/Wmhqb2yjpG
— ANI (@ANI) October 29, 2022