’’பூப்பாதை முடிந்துவிட்டது! இனி சிங்கப்பாதைதான்..’

 
ஓ

ஓபிஎஸ் இதுவரைக்கும் அமைதியாக இருந்தார்.  இனிமேல் தான் அவரது ஆட்டத்தை பார்க்கப் போகிறார்கள்.  அடி விழப் போகிறது என்று எச்சரித்து இருந்தார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.  பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாகவே அவர் இப்படி எச்சரித்திருந்தார்.  அது போலவே கடந்த 11ஆம் தேதி என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிரடியை காட்டி இருந்தார்.

ஓ

 அவர் இப்படி செய்வார் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை என்று அதிர்ந்து நிற்கிறது எடப்பாடி அணி.  இந்த நிலையில் ஓபிஎஸ்சின் பூப்பாதை முடிந்து விட்டது.  இனி சிங்கப் பாதை தான் என்கிறார் அவரது ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன்.

 அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையனிடம் தொலைபேசியில் பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு எடப்பாடி அணியில் பெரும் புயலை ஏற்படுத்தி இருக்கிறார் நாஞ்சில் கோலப்பன்.   ஓபிஎஸ் ஆதரவாளரான அவர் பொன்னையனிடம் பேசிய ஆடியோ குறித்து,   அந்த ஆடியோ மிமிக்ரி என்று பொன்னையன் பேசியது பொய் என்கிறார்.

அவர் மேலும்,    அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் பொன்னையன்.  கட்சியின் நிலைமை இப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன்.  அப்போதுதான் என்னிடம் மனம் திறந்து 17 நிமிடங்கள் பேசினார்.   கேபி முனுசாமி நடத்தி வரும் கல்குவாரி பற்றியும்,  சிவி சண்முகத்திற்கு இருக்கும் குடிப்பழக்கம் பற்றியும் அவரே பல விஷயங்களை என்னிடம் கொட்டி தீர்த்தார்.   தான் சொல்லும் இந்த விஷயங்கள் எல்லாம் ஓபிஎஸ்ன் கவனத்திற்கு போகும் , போக வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் அவர் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ப்க்

அப்படி பேசியதற்காக பொன்னையனை அதிமுகவினர் யாரும் திட்டவில்லை.   உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக அவரை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்தி வருகிறது.   பொன்னையனுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் நான் முதல் ஆளாக போய் நிற்பேன்.   லட்சக்கணக்கான தொண்டர்களும் அவருக்காக வருவார்கள்.   பொன்னையனுக்கு மட்டுமல்ல அதிமுகவின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, தமிழ்மகன் உசேன் எல்லாருக்கும் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம் என்கிறார்.

மேலும்,   ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டி எப்போது அவரை அவமானப்படுத்தினார்களோ,  அசிங்கப்படுத்தினார்களே அப்போது ஓபிஎஸ்ன்  பூப்பாதை முடிந்து விட்டது.  இனிமேல் அண்ணனின் சிங்கப் பாதையைத்தான் அவர்கள் பார்க்கப் போகிறார்கள் என்று எச்சரித்திருக்கிறார் நாஞ்சில் கோலப்பன்.