1000 சமையல் கலைஞர்கள்-1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு விருந்து -அசத்திய மாஜி முதல்வர்

 
tட்

 ஆயிரம் சமையல் கலைஞர்கள், முப்பது வகையான உணவுகள், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு விருந்து என்று அசத்தி இருக்கிறது தெலுங்கு தேசம் கட்சியின் மகாநாடு.  ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்படி தனது கட்சி சார்பில் அசத்தியிருக்கிறார்.

எட்2

 ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் மகாநாடு இரண்டு நாள் நடந்திருக்கிறது.   ஓன்கோல் பகுதியில் நடந்த இந்த இரண்டு நாள் மகாநாட்டில் கட்சி மீது நல்ல அபிப்பிராயத்துடன் மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு அதே மரியாதையை  நாமம் திருப்பி காட்ட வேண்டும் என்று முடிவு செய்த சந்திரபாபு நாயுடு,  மகா நாட்டுக்கு வருபவர்களுக்கு விருந்து வைப்பது என்று முடிவு செய்து இருந்திருக்கிறார்.

 மகா நாட்டுக்கு வரும் அனைவருக்கும் தெலுங்கு பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்ற வகையில் ஆந்திர உணவுகள் சமைக்கப்பட்டு இருக்கின்றன.  முதல் நாள் கூட்டத்திற்கு 12 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது . ஆனால் எண்ணிக்கை இருமடங்கிற்கும் மேலாகி விட்டதாம்.   இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விருந்தினர்களுக்காக முற்றிலும் சைவ உணவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

ச்ன்

 எதிர்பார்த்ததை விட கூட்டம் இரட்டிப்பு ஆனாலும் யாருக்கும் பற்றாக்குறை இல்லாமல் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது.  கூடுதலாக வந்தவர்களுக்கும் உடனுக்குடன் உணவு தயார் செய்து வழங்கப்பட்டிருக்கிறது.   புகழ்பெற்ற 30 வகையான இனிப்பு வகைகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  இதற்காகவே விஜயவாடாவில் இருந்து சுமார் 1000 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.  

 மகாநாட்டின் முதல் நாட்டில் 30 ஆயிரம் பேருக்கும்,  இரண்டாவது நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டிருக்கிறது.