காஷ்மீர் மக்களின் இதயங்களை வெல்ல முயற்சிக்காத வரை தீவிரவாதம் முடிவுக்கு வராது.. பரூக் அப்துல்லா

 
பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிப்பு!

மத்திய அரசு காஷ்மீர் மக்களின் இதயங்களை வெல்ல முயற்சிக்காத வரை தீவிரவாதம் முடிவுக்கு வராது என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் பஜார் பகுதியில் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் முஷ்டாக் அகமது என்பவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். முஷ்டாக் அகமது கொல்லப்பட்டதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். ஸ்ரீநகரில் நேற்று பரூக் அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: தீவிரவாதத்தின் பயணம் முடிவுக்கு வராது. அவர்களின் (பா.ஜ.க.) அமைச்சர்களும் மற்ற தலைவர்களும் அது (தீவிரவாதம்) முடிந்து விட்டதாக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். 

மத்திய அரசு

ஆனால் நீங்கள் காஷ்மீர் மக்களின் இதயங்களை வெல்ல முயற்சிக்காத வரை இது (தீவிரவாதம்) முடிவுக்கு வராது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நமது அண்டை நாட்டுடன் (பாகிஸ்தான்) பேசி அதன் தீர்வை தேடுங்கள். அவரது (முஷ்டாக் அகமது) மகன் 2020ல் ராணுவத்தால் (என்கவுன்டரில்) கொல்லப்பட்டார். தற்போது முஷ்டாக் அகமது தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. கொலையாளி யார், இங்குள்ள மக்களின் மீட்பர் யார் என்பது எங்களுக்கு தெரியாது. இது விசித்திரமானது. நான் அனைவரும் அதை கண்டித்து அவருக்காக பிரார்த்தனை செய்கிறோம். இந்த இழப்பை அவரது குடும்பத்தினர் தாங்கி கொள்ளவும் பிரார்த்திக்கிறோம். 

பாகிஸ்தான்

கொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் குடும்பம் கவுரமாக வாழ்வதற்காக அரசு கணிசமான இழப்பீடு வழங்க வேண்டும். கடவுளை எங்களை காப்பாற்று, இவ்வாறானதொரு (இலங்கை நிலைமை) சூழலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டாம் என்று பிரார்த்திக்கின்றோம். இலங்கை மக்களை கடவுள் அவர்கள் இருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து விடுவிப்பதற்காக பிரார்த்திக்கிறோம். மேலும், இந்த நிலைமையை இறைவன் இந்த அரசாங்கத்துக்கு புரிய வைக்கட்டும். எனவே அதை இங்கு தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.