இறைவன் ராமர் அனைவருக்கும் உரியவர், இந்துக்களுக்கு மட்டுமல்ல... பரூக் அப்துல்லா பேச்சு

 
ராமர்

இறைவன் ராமர் அனைவருக்கும் உரியவர், இந்துக்களுக்கு மட்டுமல்ல என்றும், தேர்தல் நேரத்தில் இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்  என்று சொல்வார்கள்  ஆனால் அதற்கு  மக்கள் இரையாக வேண்டும் என்றும் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: இறைவன் ராமர் அனைவருக்கும் உரியவர், இந்துக்களுக்கு மட்டுமல்ல. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது நாட்டை வலிமையாக்க வேண்டுமானால் நாம் ஒன்றாக நிற்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது, உங்களிடம் வந்து இந்துக்கள் ஆபத்தில் உள்ளதாக சொல்வார்கள். இந்தியாவில் 70 முதல் 80 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், அவர்கள் ஆபத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?. 

பரூக் அப்துல்லா

எந்த மதமும் கெட்டது இல்லை, அதன் மனிதர்கள் ஊழல் செய்பவர்கள், மதம் அல்ல. தேர்தல் நேரத்தில் இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்  என்று சொல்வார்கள்  ஆனால் அதற்கு இரையாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேசிய மாநாடு கட்சி ஒரு போதும் பாகிஸ்தானின் பக்கம் நிற்கவில்லை. எப்போதும் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது. நாங்கள் ஒரு போதும் பாகிஸ்தானுடன் கைகோர்க்கவில்லை. ஜின்னா எனது தந்தையை சந்திக்க வந்திருந்தார், ஆனால் அவருடன் கைகோர்க்க மறுத்தோம். 

முகமது அலி ஜின்னா

சரியான நேரத்தில் (தேர்தல் நேரத்தில்) நீங்கள் எங்களை ஆதரித்தால், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என நாம் மீண்டும் ஒன்றாக இருக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இங்கு 50 ஆயிரம் வேலைகள் வழங்கப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவை எங்கே? நமது மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நமது குழந்தைகள் அனைவரும் வேலையில்லாமல் உள்ளனர். இதை ஒரு கவர்னரால் செய்ய முடியாது, நீங்கள் அவரை பொறுப்பேற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.