தமிழகத்திலும் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம் - எச்சரிக்கும் ராம.ரவிக்குமார்

 
jk

 இது திராவிட மாடல் அரசு அல்ல.  ராஜபக்சே மாடல் அரசு.  தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம் என்று எச்சரித்திருக்கிறார் ராம. ரவிக்குமார்.

 இந்து தமிழர் கட்சியின் மாநில நிறுவன தலைவர் ராம. ரவிக்குமார் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் . அவர் மேலும் அது குறித்து,   இலங்கையில் குடும்ப ஆட்சியால் பொருளாதார சீரழிவு  உருவாகி இருக்கிறது.  தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம் என்று சொன்னவர்,   இது திராவிட மாடல் அரசு அல்ல.  ராஜபக்சே மாடல் அரசு என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

r

 தொடர்ந்து அது குறித்து பேசிய ராம. ரவிக்குமார்,  திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயர் வைக்கும் முயற்சியை எதிர்க்கிறோம்.  அதேபோல் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதியின் சிலை வைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.  ஓமந்தூரார் பெயரை மாற்றி கருணாநிதியின் பெயரை வைக்கும் முன் முயற்ச்சியாகத்தான் இந்த செயல் நடைபெறுகிறது.  முன் முயற்சியாக கூட இருக்கலாம் என்கிறார் .  

சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,  அடுத்ததாக திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட இருக்கும் நிலையில்,  ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்திலும் கருணாநிதி சிலை வைக்க முயற்சி நடைபெறுவதால் தொடர்ந்து இது மாதிரியான திமுகவின் செயல்களுக்கு பாஜகவினரும், அதிமுகவினரும்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.