ஆணவம் அல்ல, அது நம்பிக்கை மற்றும் தேசிய நலனை பாதுகாத்தல்.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

 
ஆயுதம் இருந்தது… ஒப்பந்தத்தை மதித்து பயன்படுத்தவில்லை! – ராகுலுக்கு ஜெய்சங்கர் பதில்

அதிகாரத்துவவாதிகள் திமிர் பிடித்தவர்கள் என்ற காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு, ஆணவம் அல்ல, அது நம்பிக்கை மற்றும் தேசிய நலனை பாதுகாத்தல் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யும், அந்த கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி லண்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கான யோசனைகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி பேசுகையில், ஐரோப்பாவில் பணிபுரியம் இந்திய அதிகாரிகளிடம் பேசும்போது, இந்திய வெளியுறவுத்துறை முற்றிலும் மாறிவிட்டது. அவர்கள் (இந்திய வெளியுறவுத்துறை) எதையும் கேட்க மாட்டார்கள், அவர்கள் ஆணவம் பிடித்தவர்கள், இப்போது அவர்கள் என்ன உத்தரவுகளை பெறுகிறார்கள் என்பதை எங்களிடம் கூறுகிறார்கள், உரையாடல் இல்லை, உங்களால் அதை செய்ய முடியாது என்று என்னிடம் தெரிவித்தார்கள் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி

அதிகாரத்துவவாதிகள் திமிர் பிடித்தவர்கள் என்ற காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய வெளியுறவுத்துறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் உத்தரவை பின்பற்றுகிறது. அவர்கள் மற்றவர்களின் வாதங்களை எதிர்க்கிறார்கள். இது ஆணவம் என்று அழைக்கப்படுவதில்லை. ஆனால் அது நம்பிக்கை மற்றும் தேசிய நலனை பாதுகாத்தல் என்று அழைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

பா.ஜ.க.

ராகுல் காந்தி அந்த கருத்தரங்கில்  பிரதமர் மோடி மற்றும் நாட்டின் நிலை குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிரான தனது வெறுப்பில் இந்தியாவுக்கு ராகுல் காந்தி தீங்கு விளைவித்தார் என பா.ஜ.க. தெரிவித்தது. மேலும், ராகுல் காந்தி வெளிநாட்டில் மண்ணில் இருந்து நாட்டை பற்றி அடிக்கடி விமர்சித்து வருகிறார், அது துரோகம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியது.