#Exclusive எடப்பாடி பேசுற முட்டாள்தனத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது! தனிக்கட்சி ஆரம்பிச்சு அவரால பவர் காட்ட முடியுமா? கே.சி.பழனிச்சாமி பாய்ச்சல்

 
க்ச்ப்

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானவர் கே.சி.பழனிச்சாமி.  பாஜகவை விமர்சித்ததற்காக ஓபிஎஸ் -இபிஎஸ்சால் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டவர்.  அதிமுகவின் விதிகளை திருத்தக்கூடாது என்று இவர் தொடுத்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் , தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கின்றன.  அவர் நமது டாப்தமிழ்நியூஸ் இணையத்திற்காக அளித்த சிறப்பு பேட்டி இது.

அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவை எப்படிப்பார்க்கிறீர்கள்?
ஒன்றுபட்ட அதிமுக.  அதுதான் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவாக இருக்கும். அதுதான் எம்.ஜி.ஆர். துவக்கிய ஜெயலலிதாம்மா வளர்த்த அதிமுகவாக இருக்கும்.  

இந்த பிளவு ஏற்பட யார் காரணம்?
இருவருக்குமே இருக்கும் பதவி வெறிதான் காரணம். 

ப்

ஓபிஎஸ் தொடர்ந்து இபிஎஸ்க்கு விட்டுக்கொடுத்து வந்தார். இந்த முறை விட்டுக்கொடுக்காததால்தான் இவ்வளவு பிரச்சனையா?
இரண்டு பேருமே கட்சியை விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.   பாஜக, திமுகவுக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  
ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை. அதற்கு ஓபிஎஸ்  இபிஎஸ் இருவருமே இணைந்த அணிகளுக்கு சின்னத்தை கொடுங்க. ஆனால் விதிகளை திருத்துவதை அனுமதிக்க கூடாது என்றுதான் தேர்தல் ஆணையத்தில் சொன்னேன். ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் அழுத்தம் காரணமாக இரட்டைத்தலைமையை உருவாக்கியபோது அங்கீகரித்தார்கள். அதன் விளைவுதான் அதிமுகவுக்கு இந்த ஒரு அவல நிலை வந்திருக்கிறது.

பொதுக்குழு விதிகள் திருத்தப்பட்டுள்ளனவே.  அது சரியா?
எடப்பாடிப ழனிச்சாமி அவருக்கு சௌகர்யமாக எதை வெண்டுமானாலும் செய்வார். அவருக்கு எது பொறுத்தமாக இருக்குதோ அதைச்செய்யுறார். ஆனால், அது அல்ல அதிமுக.   எடப்பாடி ஒன்றும் அதிமுகவின் ஸ்தாபகர் அல்ல.  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்  ஸ்தாபகர்.  அவரும் சும்மா கொடுத்துட்டுப்போகல. ஆயிரம் கோடி சொத்தை அதிமுகவுக்கு கொடுத்திட்டு போயிருக்கிறாரு.  அதை எடப்பாடி எட்டப்பன்கள் தங்களுக்கு சாதகமாக வளைக்கப்பார்க்கிறார்கள்.  

எடப்பாடி கை ஓங்கியிருக்கிறதே?
ஒன்றுபட்டு அதிமுகதான் தேவை.  இதில் ஒபிஎஸ் , இபிஎஸ், சசிகலா என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை.   இது எம்.ஜி.ஆர். கட்சி.  ஜெயலலிதாம்மா வளர்த்தெடுத்த கட்சி.  மற்றவர்கள் எல்லாம் ஒரு பொருட்டு அல்ல.  

க்ச்

ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்கிறீர்களே..எடப்பாடி பக்கம்தானே எல்லாம் நிற்கிறார்கள்?

சாதி ரீதியான அமைப்பை உருவாக்குகிறார்கள்.  பிளவை ஏற்படுத்துகிறார்கள்.  பொதுக்குழு மேடையில் அமர்ந்தவர்கள் எல்லோருமே அக்யூஸ்டுகள். ஒவ்வொருத்தர் மேலும் ஊழல் வழக்குகள் உள்ளன.  எம்.ஜி.ஆர். தலைவராக வரும்போது பலகீனம் இருந்ததா? வந்ததுக்கு பிறகுதான் அம்மாவுக்கு(ஜெயலலிதா)வந்தது.  

அதிமுக வலிமை பெற வேண்டும் என்றால் யார் பின்னால் அணி திரள வேண்டும்?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பின்னால்தான் அதிமுக தொண்டர்கள் அணி திரள்வார்கள்.  அதாவது அதிமுகவின் பின்னால் இரட்டை இலை சின்னத்தின் பின்னால்தான் அணி திரள்வார்கள். எடப்பாடி பின்னால் தொண்டர்கள் இல்லை.  எடப்பாடியை கட்சியை விட்டு வெளியே போகச்சொல்லுங்கள். அவர் பின்னால் யார் செல்கிறார்கள் என்று பார்க்கலாம்.  கட்சி பெருசா எடப்பாடி பெருசா என்று செக் பண்ணனும்னா கட்சியை விட்டு எடப்பாடி வெளியே போனா தெரியும். எம்.ஜி.ஆர். என்ன செஞ்சார்? திமுகவை விட்டு வெளியே வந்து தனிக்கட்சியை அதிமுகவை உருவாக்கினார்.  ஜெயலலிதாம்மா என்ன செஞ்சாங்க? ஜா அணியை எதிர்த்து நின்று வெற்றி பெற்றாங்க.  அப்படி எடப்பாடி பழனிச்சாமியை காட்டச்சொல்லுங்க.  தனிக்கட்சி ஆரம்பித்து  கூட்டத்தை கூட்டச்சொல்லுங்க. வரட்டு வாதங்களுக்கு விதண்டா வாதங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பல.  

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்தற்கு ஓபிஎஸ்சை துரோகி என்று கடுமையாக விமர்சிக்கிறாரே இபிஎஸ்?
எடப்பாடி பேசுற முட்டாள்தனத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை ஓபிஎஸ் பொருளாளர்தானே.  அவரை ஏன் அதிமுக அலுவலகத்திற்குள் வரவிடாமல் தடுக்கணும்? நீங்க பூட்டியதால்தான் உடைத்தார்கள். ஆவணங்களை அள்ளிச்சென்றார்கள். இல்லை என்றால் டீ சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போயிருப்பார்கள்.  இத்தனை பிரச்சனைக்கும் எடப்பாடிதான் காரணம்.

மேலும் முழு பேட்டியைக் காணொளியில் காண...