அமைச்சர் பொன்முடிக்கு எதிரான ஆதாரங்கள் - விடுவிக்க மறுத்த நீதிபதி

 
pp

சட்ட விரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.  இந்த வழக்கிலிருந்து தன்னை  விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி மனுதாக்கல் செய்திருந்தார். 

h

 இந்த வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.  இவ் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி பொன்முடி மனுதாக்கல் செய்திருந்தார்.

 இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது .   இதை எதிர்த்து பொன்முடி  உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  விசாரித்த உயர்நீதிமன்றம்,  பொன்முடிக்கு எதிராக வழக்க நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சொல்லி அவரது மனுவை  தள்ளுபடி செய்துள்ளது.