அயோத்தியை இந்துக்கள் ஏற்கனவே கைப்பற்றி விட்டனர், இப்போது காசி, நாளை மதுரா.. சர்ச்சையை கிளப்பிய ஈஸ்வரப்பா
அயோத்தியை இந்துக்கள் ஏற்கனவே கைப்பற்றிவிட்டனர். இப்போது, காசி காவலில் எடுக்கப்பட்டுள்ளது, நாளை மதுரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈஸ்வரப்பா கூறியதாவது: ஞானவாபி மசூதி வளாகத்தில் 12 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களுக்கு நல்ல சகுனம். ஞானவாபியில் மசூதி இல்லை, சிவன் கோயில் உள்ளது என்று சர்வே கண்டறிந்துள்ளது. அவுரங்கசீப் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்த ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியை நாம் ஏன் அவரை தேச விரோதி என்று சொல்லக்கூடாது?.
காங்கிரஸ் கட்சியில் உள்ள தேசவிரோதிகள் இன்னும் பாடம் கற்கவில்லை. இந்து யாத்திரை மையங்கள் பற்றி கட்சியில் இருந்து யாரும் பேசுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இடமில்லை. ஆனால் அமைதியாக இந்துக்களின் பலவீனம் அல்ல. அயோத்தியை இந்துக்கள் ஏற்கனவே கைப்பற்றிவிட்டனர். இப்போது, காசி காவலில் எடுக்கபட்டுள்ளது, நாளை மதுரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். அண்மையில், நூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம் என பேசியிருந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.