24 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தல்! ஆம்புலன்சில் வந்து வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் -சிறையில் இருந்து வாக்களிக்க வர முடியாத எம்.எல்.ஏக்கள்

 
e

 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாராஷ்டிராவில் மாநிலங்களவை எம்பி தேர்தல் நேற்று நடந்தது.  6 எம்.பிக்கான தேர்தலில் 285 எம்எல்ஏக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.  ஆம்புலன்ஸ் ஸ்டெச்சரில் வந்து எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.   சிறையில் இருக்கும் இரண்டு எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க அனுமதி கிடைக்கவில்லை.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஏழு பேர் போட்டியிட்டனர்.  இதனால் வாக்குப்பதிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது . ஆளும் கட்சிகள் சார்பில் சஞ்சய் ராவத், பிரபுல் படேல், இம்ரான் பிரதப் கார்கி ஆகியோரும்,  பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ,அனில் போன்டே  களமிறங்கி இருந்தனர் . 

y

 மகாராஷ்டிராவில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த மாநிலங்களவை வாக்குப்பதிவு என்பதால் பரபரப்பாக இருந்தது.  வாக்களித்த எம்எல்ஏக்களுக்கு புதிய அனுபவமாக இருந்துள்ளது.  24 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் நடக்கும் மாநிலங்களவை தேர்தல் என்பதால் பொதுமக்களளும் இத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். 

 காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.   தேசியவாத காங்கிரசை  சேர்ந்த மாநில இணை அமைச்சர் தத்தாரே பார்னே தனது முதல் வாக்கை பதிவு செய்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவசேனா எம்.எல்.ஏ. மகேந்திர தால்வி வீல் சேரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.   அதேபோல் பாஜக எம்எல்ஏ லட்சுமணன் புனேயிலிருந்து ஆம்புலன்சில் வந்து வாக்கை பதிவு செய்தார்.   புனே கப்சா தொகுதி பாஜக எம்எல்ஏ முக்தா திலக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆம்புலன்சில் வந்த ஆம்புலன்சில் இருந்து ஸ்டெச்சர் மூலம் வாக்குப்பதிவு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் . அவருக்கு உதவியாக  அவரது கணவர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ut

முதல்வர் உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.யாக இருப்பதால், அவருக்கு இந்த தேர்தலில் ஓட்டுரிமை இல்லை.

 மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தனர்.   கோர்ட் அனுமதி கிடைக்காததால் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், அமைச்சர் நவாப் மாலிக் ஆகிய இருவரும் ஓட்டு போட முடியவில்லை . மொத்தமுள்ள 288 எம்எல்ஏக்களினல்  285 பேர் வாக்குப் பதிவு செய்திருந்தனர்.