பாலாசாகேப் தாக்கரேவின் நம்பிக்கையின் அடிப்படையில் பா.ஜ.க.-சிவ சேனா அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது... ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான கிளர்ச்சி பெரிய விஷயம். நானே அமைச்சராக இருந்தேன், மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினர். பாலசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோரின் சித்தாந்தத்தில் இருந்த என்னை போன்ற ஒரு சாதாரண தொண்டனுக்கு இது மிகப் பெரிய விஷயம்.

ராகுல் நர்வேகர் (நடுவில் இருப்பவர்)

பாலாசாகேப் தாக்கரேவின் நம்பிக்கையின் அடிப்படையில் இப்போது பா.ஜ.க.-சிவ சேனா அரசாங்கம் மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றுள்ளது. இன்றுவரை, மக்கள் எதிர்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு மாறுவதை நாம் பார்த்தோம், ஆனால் இந்த முறை அரசாங்கத்தின் தலைவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்றனர். முதல்வராக பதவியேற்றதும், நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பா.ஜ.க. ஜனநாயகத்தை மதித்து எனக்கு  ஆதரவளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ் பிறந்த நாளுக்கு பேனர் வைக்காதீங்க.. மக்களுக்கு சேவையாற்றுங்க.. பா.ஜ.க. வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணியின்  இந்த அரசு மகாராஷ்டிராவின் அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்ற முயற்சிக்கும். அதற்கு சபாநாயகர் நல்ல ஒத்துழைப்பை வழங்குவார் என நம்புகிறோம் என தெரிவித்தார். முன்னதாக முன்னாள் முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே கட்சியை விட்டு விலகியவர் (ஏக்நாத் ஷிண்டே) சிவ சேனா முதல்வராக என்று தெரிவித்து இருந்தார்.