பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கத் தயார் என்றால் சிவ சேனாவில் பிளவு ஏற்படாது.. தாக்கரே எச்சரிக்கை விடுத்த ஏக்நாத் ஷிண்டே

 
பா.ஜ.க.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கத் தயார் என்றால் சிவ சேனாவில் பிளவு ஏற்படாது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சரவை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் (சுமார் 35 பேர் என கூறப்படுகிறது) குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஹோட்டலில் நேற்று முதல் தங்கியுள்ளார். சிவ சேனா கட்சி தலைமை ஏக்நாத் ஷிண்டேவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததாக சந்தேகத்தின்பேரில் சட்டப்பேரவை கட்சியின் குழு தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவ சேனா நீக்கியது.

ஏக்நாத் ஷிண்டே

அதேசமயம் ஏக்நாத் ஷிண்டேவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையிலும் சிவ சேனா இறங்கியது. சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் நர்வேகர் நேற்று குஜராத்தில் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது ஏக்நாத் ஷிண்டேவை போன் மூலம் உத்தவ் தாக்கரேவிடம் பேச வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டே, என்னிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.க.வுடன் சிவ சேனா கூட்டணி வைக்க தயார் என்றால் சிவ சேனாவில் பிளவு ஏற்படாது.

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா ஏற்பாடு! – மும்பை போலீஸ் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

நான் முதல்வர் பதவியை குறிவைக்கவில்லை, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு எதிராக சிவ சேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். அதேவேளை, உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவிடம், சிவ சேனா தொண்டர்கள் மற்றும் தலைவர்களை பா.ஜக.. துன்புறுத்துகிறது. பா.ஜ.க. கடந்த காலங்களில் சிவ சேனாவை தவறாக நடத்தியது என தெரிவித்தார். அதற்கு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவ சேனா கூட்டணி வைப்பதில் சூரத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல் உள்ளது என தெரிவித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.