எங்களுடையது சாமானிய மக்களின் அரசு. யாரையும் அவமதிக்காத அரசு எங்களுடையது... ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

எங்களுடையது சாமானிய மக்களின் அரசு. யாரையும் அவமதிக்காத அரசு எங்களுடையது என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.


மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுடையது சாமானிய மக்களின் அரசு. யாரையும்  அவமதிக்காத அரசு எங்களுடையது. ஒவ்வொரு சமூகமும் மதிக்கப்பட்டு முன்னேறும். மாநிலம் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் மற்றும் வளர்ச்சி செயல்முறை முன்னோக்கி கொண்டு செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமித் ஷா, மோடி

முன்னதாக கடந்த திங்கட்கிழமை இரவு புனேவில் சிவ சேனா தொண்டர்கள் மத்தியில் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுகம் மாநிலத்தின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும் திட்டங்களை ஒதுக்க உள்ளேன். மாநிலம் முழுவதும் மாற்றம் ஏற்படும். இது பெரிதுப்படுத்தவில்லை, வேலை செய்து பிறகு பேசுகிறேன்.

பால் தாக்கரே

நாங்கள் அநீதிக்கு எதிராக நின்றோம், கிளர்ச்சி செய்யவில்லை. பாலாசாகேப் தாக்கரே (சிவ சேனா நிறுவனர்) அநீதிக்கு எதிராக எழும்புமாறு எங்களை கேட்டுக் கொண்டார். இது அவரது மற்றும் ஆனந்த் திகேவின் (ஏக்நாத் ஷிண்டேவின் வழிகாட்டி) போதனை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.