தமிழக அரசியலில் தலைவிரித்தாடும் விவகாரம் - ஈஸ்வரன் எரிச்சல்

 
e

தமிழக அரசியலில் தற்போது தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது   அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம்.  தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திறம்பட செயல்பட வேண்டும் என்றால் அக்கட்சிக்கு ஒற்றை தலைமை என்பது தான் நல்ல தீர்வாக இருக்கும்.   தற்போது இருக்கும் இரட்டை தலைமை நிர்வாகிகளை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் தான் பயன்படும்.   எதிர்க்கட்சியாக மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால் ஒற்றை தலைமை தான் நல்ல தீர்வாக இருக்கும் என்றார் ஈஸ்வரன்.

w

 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் ஈஸ்வரன் பெருமாநல்லூர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில்  மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,    ’’தமிழக அரசியலில் தற்போது அதிமுகவின்  ஒற்றை தலைமை விவகாரம் தலைவிரித்தாடுகிறது’’எரிச்சல்பட்ட ஈஸ்வரன்,  ’’தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திறம்பட செயல்பட வேண்டும் என்றால் அக்கட்சிக்கு ஒற்றைத்தலைமை என்பது தான் நல்ல தீர்வாக இருக்கும் ’’என்றார்.

தொடர்ந்து அது குறித்து பேசிய ஈஸ்வரன்,   ’’தற்போது இருக்கும் இரட்டை தலைமை அந்த கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் தான் உதவும்.  எதிர்க்கட்சியாக  மக்களுக்காக குரல் கொடுக்க  ஒற்றை திறமை இருந்தால் தான் திறம்பட செயல்பட முடியும்.  குரல் கொடுக்க முடியும்.  அதனால் நான் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது நிரந்தர தீர்வாக அமையும் ’’என்று தெரிவித்துள்ளார்.