பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது- ஈபிஎஸ்

 
ep

கட்சி விதிகளின் படி நான் தான் இப்போது வரை ஒருங்கிணைப்பாளர் - ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தாஜ் தனியார் நட்சத்திர விடுதியில் திரௌபதி முர்மு கூட்டணி கட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு கோரும் கூட்டம் நடைபெற்றது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் 21-ம் தேதி எண்ணப்படவுள்ளன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான, அதிமுக,  பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் , பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை  சர்ச்சை தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் ,  ஓபிஎஸ்  மற்றும் ஈபிஎஸ் ஒன்றாக சேர்ந்து திரெளபதி முர்முவை சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய பின் பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் முதலிலும் , பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தனியாகவும் முர்முவை  சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசு தலைவராக வருவது பெருமைக்குரியது. அதிமுகவைப் பொருத்தவரை பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம். பொதுக்குழு எடுத்த முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய நிலைக்கு அவர்தான் காரணம். நாங்கள் இல்லை. பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ். கட்டுப்பட்டிருந்தால், இன்று திரௌபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது” என்று பேசினார்.