ஓபிஎஸ் -ஐ அலற வைத்த எடப்பாடி
ஓ. பன்னீர்செல்வத்தினாலும், எடப்பாடி பழனிச்சாமியாலும் அதிமுக தற்போது இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதில் ஓ . பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இதனால் கட்சியின் எந்த முடிவுகளையும் உடனடியாக எடுக்க முடியாமல் ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போய் கடைசியில் தான் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இரட்டை தலைமை இருப்பதால்தான் இந்த நிலை. அதனால் கட்சியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும். பழையபடி அதிமுகவில் ’பொதுச் செயலாளர்’ என்கிற பொறுப்பை கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ரொம்பவே மெனக்கட்டு வருகிறார்கள் என்று தகவல்.
இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் கூட இருக்கிறது. வரும் ஜூன் 23ஆம் தேதி அன்று சென்னையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடுகிறது. இந்த பரப்பான சூழலியில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்கிறார் என்று அவரது ஆதரவாளர் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்.
அதுவும் ஓ. பன்னீர்செல்வம் சொந்த ஊரில் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார். ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு அருகிலேயும் இந்த போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார் .இதனால் பன்னீர்செல்வமும் ஆதரவு ஆதரவாளர்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர் என்கிறார்கள் பெரியகுளம் அதிமுகவினர்.
ஓ. பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் வீடு செல்லும் சாலை மற்றும் தேனி எம்பி இரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமி -ஓ. பன்னீர்செல்வம் இருவரும் அதிகாரப் போட்டியில் இருக்கும்போது ஓபிஎஸ் இல்லத்தின் வீடு அருகிலேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது அப்பகுதியில் மட்டுமல்லாது அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.