மறைமுகமாக காய் நகர்த்தி வந்த எடப்பாடி! கடுப்பான வையாபுரி

 
e

 எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக காய் நகர்த்தி வந்திருக்கிறார் என்பது தெரிந்ததும் கடுப்பான வையாபுரி தனது பதவியை ராஜினாமா செய்து அதிரடி காட்டி இருக்கிறார்.  இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்டம் கண்டிருக்கிறார்.

 சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . தற்போது அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.   சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.  ஆனால் மாவட்டச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு வெளியானபோது எடப்பாடி பழனிசாமி தனது நண்பர் இளங்கோவனுக்கு அந்த பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார்.  இதில் கட்சியினர் பலருக்கும் பெரும் அதிர்ச்சி.

e

 எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின் பேரில் தான் ரகசியமாக இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.  இரவில் தாமதமாக முடிவு அறிவிக்கப்பட்டதும் ஒரு சூழ்ச்சி தான் என்று கடுப்பாகி இருக்கிறார்கள் சேலம் மாவட்ட அதிமுகவினர்.

சேலம் அதிமுகவில் கீழ்மட்ட அளவில் நடந்த உட்கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவை மீறி அதிருப்தியாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.  தங்கள் ஆதரவாளர் ஒருவரை நிற்க வைத்து பகுதி செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன ஆதரவாளரை தோற்கடித்து விட்டார்கள்.  இதே போன்ற நிலைமை மாவட்ட செயலாளர் விஷயத்திலும் நடந்துவிடும் என்று நினைத்த எடப்பாடி ரகசியமாக காய் நகர்த்தி வந்திருக்கிறார் .

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சேலம் மாவட்ட சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்றதும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை.  இதை முன்பே நினைத்துதான் தான் போட்டியிடா விட்டால் நிறைய வேறு போட்டியில் களம் இறங்குவார்கள்.  தனது நண்பர் இளங்கோவன் மாவட்ட செயலாளர் ஆக முடியாது என்று நினைத்துதான் தான் போட்டியிடுவது போல் ஒரு காய் நகர்த்தி வந்திருக்கிறார். 

vp

 இதற்கிடையில் இளங்கோவனை ரகசியமாக வேட்புமனு தாக்கல்  செய்ய வைத்து கடைசியில் இளங்கோவன் வெற்றி பெற்றதாக அறிவித்து இருக்கிறார் . இப்படி மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி காய் நடத்தி வந்ததால் கடுப்பாகி போயிருக்கிறார் சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் வையாபுரி.  இதனால் அவர் செய்தியாளர்களை சந்தித்து,   எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்றும்.  ஆனால்  இளங்கோவனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? இளங்கோவனை பொறுத்தவரை கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார் . சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி காரியம் சாதிக்கிறார் . கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படும் இளங்கோவனுக்கு பதவி வழங்குவது எந்த வகையில் நியாயம்? பல ஆண்டுகளாக பணியாற்றி இருக்க முடியவில்லை என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லிவிட்டு சேலம் மாவட்ட திமுக செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.