ஐகோர்ட் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட எடப்பாடி! தமிழ்மகன் உசேன் அறிவித்தது சரியா?

 
ff

 உயர்நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது.   அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடையில்லை.  நடத்தலாம்.   அதே மாதிரி  தற்போது வரைவு  செய்யப்பட்டிருக்கும் இருபத்தி மூன்று தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.  தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது.  புதிய தீர்மானம் தொடர்பாக ஆலோசித்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு 23 தீர்மானங்களை புறக்கணிப்பதாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2190 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை காட்டினார்  சிவி சண்முகம். 

bbb

இந்த பொதுக்குழு 23 தீர்மானங்களை நிராகரிக்கிறது என்றும்,  ஒற்றைத்தலைமை தீர்மானத்தை அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றியே தீருவோம் என்றும் சிவி சண்முகம்,  கேபி முனுசாமி தெரிவித்தனர் .  இதையடுத்து 23 தீர்மான நகல்களை கிழித்து எறிந்தனர் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் .  

பொதுக்குழு இந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர்.  இந்த 23 தீர்மானங்களைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இன்று புதிய முடிவுகள் எதுவும் அறிவிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம்  சொல்லி இருந்த நிலையில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார் . அதுமட்டுமல்லாமல் ஒற்றை தலைமை தீர்மானத்தை முடிவெடுத்து அறிவிக்க வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

jjj

 இருபத்தி மூன்று தீர்மானங்களையும் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும்,  அவரே அடுத்த பொதுக்குழு தேதியை அறிவித்ததும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   பொதுக்குழு அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.   அப்படி இருக்கும்போது அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தது சரியாகுமா என்ற சலசலப்பு அதிமுகவினரிடையே எழுந்திருக்கிறது.

ஐகோர்ட் உத்தரவை மீறியதற்காக ஓபிஎஸ் டீம்,  அவமதிப்பு வழக்கு தொடரவிருக்கிறது.