ஓபிஎஸ் வாகனத்தை பஞ்சராக்கிய எடப்பாடி டீம்

 
vam

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களின் அடாவடித்தனத்தால் பொதுக்குழு பாதியிலேயே நின்றது.   இன்று நின்றுபோன பொதுக்குழு அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் என்று அவைத்தலைவர் அறிவித்திருக்கிறார்.  

vv

 ஓபிஎஸ் வெளியே போகச் சொல்லி தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் ,  ஓபிஎஸ் பேச எழுந்ததும் அவர் மீது தண்ணீர் பாட்டில்களை தூக்கி அடித்தனர்.   இதனால் மேடையை விட்டு வெளியே இறங்கி வெளியேறி தனது வாகனத்தில் ஏற முயன்றார் ஓபிஎஸ்.   அப்போதுதான் அவரது வாகனம் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது .  அப்போதும்  அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

qqq

இருபத்தி மூன்று தீர்மானங்களோடு ஒற்றைத்தலைமை  தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று எடப்பாடி தரப்பினர் உறுதியாக இருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் மூலம் தனித் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று பன்னீர்செல்வம் செய்துவிட்டதால்,  அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர் எடப்பாடி ஆதரவாளர்கள். 

qqqq

 இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு வந்த பன்னீர்செல்வத்தை துரோகி துரோகி என்று அவருக்கு எதிராக கூச்சலிட்டு வந்தனர்.  ஓபிஎஸ் வெளியே போ என்று தொடர்ந்து குரல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.   மேடையிலும்  பன்னீர்செல்வத்துக்கு வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்காமல் இருந்தனர்.  இந்த நிலையில் இன்று கொண்டுவரப்பட்ட இருபத்திமூன்று தீர்மானங்களையும் நிராகரிப்பதாக சிவி சண்முகம் சொல்ல,  நாங்களும் இந்த 23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று வைத்திலிங்கம் சொல்ல,  ஓபிஎஸ் பேச எழுந்ததும் அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசியடித்தனர் எடப்பாடி டீம்.  இதனால் ஆவேசம் அடைந்து  சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று மேடையை விட்டு வெளியேறி வேனில் ஏறியபோதுதான் அந்த வேன் பஞ்சர் ஆக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  அப்போதும்  அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.