வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார் எடப்பாடி - அமைச்சர் சக்ரபாணி எரிச்சல்
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது அவர் வகித்த பதவிக்கும் தற்போது வகித்து வரும் பதவிக்கும் அழகல்ல என்கிறார் அமைச்சர் சக்கரபாணி.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள், கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 554 டன் தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டிற்கு பதிலளித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை பார்க்க இந்திய உணவுக் கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த அரிசியை மனித பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
துறை சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பின்போது பதில் சொல்லிக் கொள்ளலாம் என்று தான் இருந்தேன். அதற்குள் எடப்பாடி பழனிச்சாமி இன்னைக்கு புறம்பான செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக விட்டிருக்கிறார். இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து வந்த கடிதங்களை உங்களுக்கு தருகிறேன். அதில் என்ன கூறியிருக்கிறது என்பதை நீங்களே படித்து பாருங்கள் என்கிறார்.
மேலும் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் கழக ஆலைகள் மூலம் வரவைத்த அரிசி தற்போதைய இருத்து மூணு லட்சத்து 23 ஆயிரத்து 554 தான் தஞ்சாவூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் காமராஜையாவது கேட்டிருக்கலாம். வைத்தியலிங்கத்திடமாவது உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் . ஆனால், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து இருக்கும் எடப்பாடி, முன்னர் வகித்து வந்த பதவிக்கும் தற்போது வசித்து வரும் பதவிக்கும் அழகல்ல என்று தெரிவித்திருக்கிறார்.