எடப்பாடி பாணி - பணத்தை அள்ளி இறைக்கும் ஓபிஎஸ்

 
oஒ


 அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மறைமுகமாக சசிகலா இருந்தாலும் பொதுவெளியில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருந்தவர் ஓபிஎஸ் .  ஆனால் இன்றைக்கு கட்சியில் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது என்றால் அவர் கட்சியினருக்கு பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கட்சியினருக்கு பணத்தை அள்ளி இறைத்ததால்தான் இன்றைக்கு அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது.  பன்னீர்செல்வம் கட்சியினருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இதுவரைக்கும் அப்படி செய்யாததால் தான் அவரிடமிருந்த ஆதரவாளர்கள் கூட எடப்பாடி பக்கம் போய்விட்டார் என்கிறார்கள் கட்சியினர்.

ப

 ஆனால் தற்போது இறுதியுத்தம் மாதிரி ஆகிவிட்டது பன்னீர் செல்வத்திற்கு.  அதனால்தான் எடப்பாடி பாணியை அவர் கையில் எடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். எடப்பாடி எப்படி முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கிய மாணவர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்தாரோ அப்படியே பன்னீர்செல்வம் தரப்பிலும் இந்த முக்கியமான தருணத்தில் முக்கியமானவர்களுக்கு செலவழிக்க தயாராகிவிட்டார்கள் என்கிறார்கள் .  

இதுவரைக்கும் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருந்த பன்னீர்செல்வம் இன்றைக்கு சென்னையில் பூந்தமல்லி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.   இதற்காக தனது ஆதரவு மா.செக்கள் மட்டுமல்லாது எடப்பாடி ஆதரவும் மா.செக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.   அவர்கள் வர தயங்கியதை புரிந்துக்கொண்ட பன்னீர்செல்வம்,    ’’கட்சியை  பாதுகாக்க நீங்க இங்கே வந்தே ஆகணும்’’ என்று கட்டளையிட்டிருக்கிறார்.  

இதனால் இன்றைக்கு  நட்சத்திர விடுதியில் இன்றைக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலானோர் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தகவல்.   பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து 20 எம்எல்ஏக்கள் உள்பட பலருக்கும் பேமெண்ட் செட்டில்மென்ட் செய்யப்பட்டு விட்டது என்றும் தகவல். வழக்கம் போல் எடப்பாடி தரப்பிலும் அள்ளி இறைக்கப்படுகிறதாம்.