ஆட்டம் கண்ட எடப்பாடி! ஓபிஎஸ்சுடன் கைகோர்த்த சேலம் மாவட்ட நிர்வாகிகள்

 
e

ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுகவினர் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள்.   அதேபோல் சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுத்து எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

ஓபிஎஸ் தனது சொந்த ஊரான பெரிய குளத்திற்கு சென்று இருக்கிறார்.   இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை அதிமுக நிர்வாகிகள் பலரும் பெரியகுளம் சென்று ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். 

d

 சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன்,  நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி,  சேலம் ரவி உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிர்வாகிகள்,  சேலம் மாநகரில் அதிமுக உருவாக்கிய காலத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு இப்போது  மரியாதை இல்லை என்று புலம்பியவர்கள்,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம்.  சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து வந்து விரைவில் ஓபிஎஸ்சை சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலிருந்து வந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பேசியபோது,   ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து ஒதுக்குவது அடிமட்ட தொண்டர்கள் யாருக்கும் பிடிக்காத சூழ்நிலை இருக்கிறது .  மரியாதை இல்லாத இடத்தில் இருப்பதை தவிர்த்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.