ஆறுகுட்டி வெளியே போனது போல் வேறு எந்த குட்டியும் வெளியே போகாது- ஈபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சிலர் மாற்றுக்கட்சியை நோக்கி பயணிக்க தயாராகிவிட்டனர். அந்தவகையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி அண்மையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “எங்களுடன் இருக்கும் எல்லா குட்டிகளையும் நன்றாக தான் வைத்துள்ளோம். ஆறுகுட்டி வெளியே போனது போல் வேறு எந்த குட்டியும் வெளியே போகாது. அ.தி.மு.க வில் சசிகலாவையும், டி.டி.வியையும் இணைக்க ஓ.பி.எஸ் அழைத்திருப்பது அவரின் நிலைப்பாடு.அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ஓ.பி.எஸ் சசிகலா ஆகியோரின் கருத்து. ஆனால் தொண்டர்களின் நிலைப்பாடு தான் என்னுடைய நிலைப்பாடு. அவர்களுக்காக தான் கட்சி” எனக் கூறினார்.