அவமானப்பட்ட எடப்பாடி! அவசரமாக சென்னை திரும்புகிறார்

 
e

எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லியில் அவமானம் நேர்ந்துள்ளது.   பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் எடப்பாடியை சந்திக்க மறுத்ததால் அந்த அவமானத்தை தாங்க முடியாமல் அவசரமாக எடப்பாடி பழனிச்சாமி  சென்னை திரும்புகிறார் என்று தகவல்.  

 சில நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசலாம் என்று இருந்த எடப்பாடி யாருமே சந்திக்க அனுமதி மறுத்ததால் அவசரமாக புறப்பட்டு சென்னை திரும்புகிறார் என்று தகவல்.

ஏற்கனவே அதிமுக  - அமமுக என்று அதிமுக என்று இரண்டாக பிரிந்து விட்டதால் வாக்குகள் சிதறி விடுகின்றன.  இதனால்தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.  திமுக வெற்றி பெற்று விட்டது.  இல்லையென்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று பாஜக நம்புகிறது.

ஏ

 இந்த நிலையில் ஓபிஎஸ் -இபிஎஸ்  இருவரும் பிரிந்தால்  அதிமுக மேலும் இரண்டாகப் பிரிந்து வாக்குகள் சிதறும்.  யாருக்குமே வெற்றி இல்லாமல் போய்விடும்.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தங்களுக்கும் அது பாதகமாக அமைந்துவிடும்.  வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கு போட்டு வைத்திருக்கும் பாஜகவுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

 இதனால் தான் ஓபிஎஸ் , இபிஎஸ் மோதல் எழும்போதெல்லாம் இருவரையும் ஒன்றாக இருக்கும் படி பாஜக மேலிடம் அறிவுறுத்தி வந்திருக்கிறது.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பிடிவாதமாக ஓபிஎஸ்ஐ ஓரங்கட்டி விட்டு அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.  இந்த நிலையில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க சென்றார்.

am

 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி,  சில தினங்களில் டெல்லியில் தங்கி இருக்க முடிவு செய்து இருந்தார்.  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டா,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், யாருமே எடப்பாடியை சந்திக்க அனுமதி மறுத்ததால், டெல்லியில் அவமானப்படுத்தப்பட்ட ஈபிஎஸ் கடும் கோபத்தில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவையும் புறக்கணித்து விட்டு அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் என்று தகவல்.  அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதனும் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.