ஓபிஎஸ்சின் ரகசியங்களை சொன்ன உதயகுமாருக்கு ஓபிஎஸ் நாற்காலியையே பரிசாக கொடுத்த எடப்பாடி

 
o

ஓபிஎஸ் இமேஜை டேமேஜ் செய்வதற்கு சரியான ஆள் இவர்தான் என்று நினைத்த எடப்பாடி,  ஓபிஎஸ்சின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் நாற்காலியை உதயகுமாரிடம் கொடுத்திருக்கிறார்.

ஓபிஎஸ் உட்கார்ந்திருந்த ஒருங்கிணைப்பாளர் நாற்காலியை ஒடித்து தூர போட்டு விட்டதால்,  அடுத்ததாக ஓபிஎஸ்சின் பொருளாளர் நற்காலியிலும் திண்டுக்கல் சீனிவாசனை அமர வைத்து விட்டார் எடப்பாடி .  மிச்சமிருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நாற்காலியிலும் உதயகுமாரை உட்காரை வைத்துவிட்டார்.  பொதுக்குழுவுக்கு முன்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முதலில் தனது தீவிர ஆதரவாளர் எஸ்.பி.வேலுமணியைத்தான் முடிவு செய்து வைத்திருந்தார் எடப்பாடி.   பொதுகுழுவுக்கு பின்னர் ஓபிஎஸ்சின் முன்னாள் ஆதரவாளர்கள் நத்தம் விஸ்வநாதன் அல்லது ஓஎஸ் மணியன் ஆகிய இரண்டு பேரில் ஒருவருக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தார்.  இதற்கிடையில்,  ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து அவரது ரகசியங்களை வெளியிடுவேன். அப்புறம் ஓபிஎஸ் வெளியே நடமாட முடியாது என்று கடுமையாக எச்சரித்த உதயகுமாருக்கு அந்த ஓபிஎஸ் நாற்காலியை பரிசாக கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

ooi

  ஓபிஎஸ்சை  எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  நற்காலியில் இருந்து எழுப்பி விட்ட பின்னர் அதில் யாரை உட்கார வைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு பட்டியல் போட்டு வைத்திருந்தார்.   அந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் நத்தம் விஸ்வநாதன்.   பொதுக்குழுவில்  வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ்ச்சை  கடுமையாக விமர்சித்தாலும் கூட நத்தம் விஸ்வநாதன் விளாசல் வித்தியாசமானது என்கிறார்கள் .  அது எடப்பாடிக்கு ரொம்பவே பிடித்திருந்ததாம்.   அந்த வகையில்  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நாற்காலியை பரிசாக அவருக்கு கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்திருக்கிறார்.  

e

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யாருக்கு கொடுக்கலாம் என்று பொதுக்குழுக்கு முன்னர் ஒரு பட்டியலும் பொதுக்குழுவுக்கு பின்னர் ஒரு பட்டியலும் போட்டு இருக்கிறார்.   பொதுக்குழுவுக்கு முன்னர் போட்ட பட்டியலில் முதலிடத்தில் எஸ்.பி.வேலுமணி இருந்திருக்கிறார்.   பொதுக்குழுவுக்கு பின்னர் போட்ட பட்டியலில்  முதல் இடத்தில் நத்தம் விஸ்வநாதன் இருந்தார்.  அடுத்ததாக ஓஎஸ் மணியன் பெயர் இருந்தது.  

sp

 பொதுக்குழுவில் புரட்சித் தலைவர் , புரட்சித்தலைவி வரிசையில் புரட்சித்தலைமகன் என்று ஓஎஸ் மணியன் எடப்பாடிக்கு பட்டம் கொடுத்தது ரொம்பவே நெகிழ வைத்திருந்ததாம் .  அதனால் அவருக்கு பட்டியலில் இரண்டாவது இடம் கொடுத்து இருந்திருக்கிறார்.  

 நத்தம் விஸ்வநாதன் அல்லது ஓஎஸ் மணி இருவரில் ஒருவருக்கு கிடைக்க எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு இருந்த நிலையில்,  திடீரென்று புகுந்த அந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார் உதயகுமார்.  ’’ஓபிஎஸ் என்னை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் அவரது ரகசியங்களை வெளியிடுவேன்.  அப்புறம் அவர் வெளியே நடமாட முடியாது’’ என்று எச்சரித்திருந்தா.

அது என்ன ரகசியம் என்பதை எடப்பாடியிடத்தில் சொல்லி இருக்கிறார் உதயகுமார்.  ஓபிஎஸ் இமேஜை டேமேஜ் செய்வதற்கு சரியான ஆள் இவர்தான் என்று நினைத்த எடப்பாடி,  ஓபிஎஸ்சின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் நாற்காலியை உதயகுமாரிடம் கொடுத்திருக்கிறார்.