ஓபிஎஸ்க்கு போட்டியாக தென்மாவட்டங்களில் எடப்பாடி

 
e

தென் மாவட்டங்களில் இருந்து விரைவில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  இந்த நிலையில் அதற்கு போட்டியாக எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தென் மாவட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரது தரப்பினரிடம் இருந்து தகவல் பரவுகிறது .

eee

அதிமுக ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்ததிலிருந்து இருவரும் தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள  இருக்கிறார்கள்.    எடப்பாடியை பொறுத்த வரைக்கும் அவர் முதல்வராக இருந்த போதும் சரி தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதும் அவர் எப்போது பார்த்தாலும் சேலம் மாவட்டத்தில் தான் இருப்பார்.   சேலம் ,நாமக்கல், திருப்பூர், வட்டாரங்களில் சுற்றிக்கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளிலேயே பங்கேற்ற வருவார்.  தென் மாவட்டங்களை கண்டு கொள்வதே இல்லை.   இதனால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்கள்.

 இந்த நிலையில்தான் தென் மாவட்டங்களை தனது ஆதரவை பலப்படுத்துவதற்கும் ஓபிஎஸ்க்கு போட்டியாக களம் இறங்குவதற்கும் விரைவில் அவர் தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   அனேகமாக சுதந்திர தினத்திற்கு பின்னர் அடுத்த வாரத்தில் இந்த சுற்றுப்பயணத்தை எடப்பாடி தொடங்க இருக்கிறார் என்கிறார்கள்.