வசமாக சிக்கிக்கொண்ட எடப்பாடி! ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லையா?

 
e

நான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ. பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் சொன்னபோது,  அந்த பதவி தான் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி தரப்பினர்  சொல்கிறார்களே என்ற கேள்விக்கு புன்னகை பூத்தார் ஓபிஎஸ்.   அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியே,  நான் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி இருக்கிறார்.  

po

 கடந்த 23ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழுவோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி ஆதரவாளர் சிவி சண்முகம் அறிவித்திருந்த நிலையில்,   ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் மட்டுமே என்று சொல்லப்பட்டிருந்த நிலையில்,   நான் அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் என்று உறுதியளித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .  இவர் ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாக  செய்து கொண்டிருக்கிறார் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தில் தான் கையெழுத்திட தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் பன்னீர்செல்வம் .  ஆனால் எடப்பாடி,   தாங்கள் இப்போது ஒருங்கிணைப்பாளர் இல்லை.  கட்சியின் பொருளாளர் மட்டுமே.   அதனால் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தாங்கள் எழுதி இருக்கும் கடிதத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளக்கமளித்து இருந்தார் எடப்பாடி.   அதேபோல் தனது டுவிட்டர் பக்கத்திலும் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை மாற்றிவிட்டு தலைமை கழக செயலாளர் என்று மாற்றி இருக்கிறார் எடப்பாடி. 

h

 கடந்த 26 ஆம் தேதி இரவு தலைமை நிலைய செயலாளர் என்று பழைய பதவியை குறிப்பிட்டு,  27ஆம் தேதி அன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் எடப்பாடி.   ஆனாலும் எடப்பாடி வெளியே ஒன்றும் உள்ளே ஒன்றும் ஆக இரட்டை வேடம் போடுகிறார் என்று சொல்லி வருகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.   அதற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தின் ஆவணங்களில் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி கையெழுத்திட்டு இருக்கிறார் எடப்பாடி.

 அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்,   23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் பொது குழு நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .  இந்த வழக்கின் மேல்முறையீட்டில் அந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது . ஆனால் பொதுக்குழுவில் நீதிமன்றத்தின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது.

 இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.   இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் .  அந்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுகவினல் இணை  ஒருங்கிணைப்பாளராக இருக்கும்... தொடங்கி எழுதியிருக்கிறார் . வெளியே கட்சி ரீதியாக எல்லோரிடமும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது .  பொருளாளர் தலைமை நிலைய செயலாளர் தான் ஓ .பன்னீர்செல்வமும் நானும் இருக்கிறோம் என்று எடப்பாடி சொல்லி வந்தாலும்,  உச்சநீதிமன்றத்தின் ஆவணத்தில் ஏன் தன்னை  இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டார் என்ற சலசலப்பு எழுந்ததால் வசமாக சிக்கிக் கொண்டார் என்று ஓபிஎஸ் தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

sv

ஆனால் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் இன்பத்துரை,   சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு இருக்கும் வழக்கில் அதிமுகவின் இணைய ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்த வழக்கின் அப்பில் செய்த வழக்கிலும் இணை  ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  அதனால் அந்த வழக்கின்  தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது செய்தபோது எதிர்மனுதாரர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இணை  ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் அதே போன்று மேல்முறையீட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.   ஆனால் வழக்கு சுருக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை . அவர் தலைமை நிலைய செயலாளராகவே இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறோம் என்கிறார்.