62 பேரிடம் கையெழுத்து வாங்கும் எடப்பாடி! ஓபிஎஸ்சிடம் இருக்கும் அந்த ஒன்றையும் பறிக்க தீவிரம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், அதிமுகவின் பொருளாளர் பதவிகளை எல்லாம் ஓபிஎஸ் இடம் இருந்து பறித்து விட்ட எடப்பாடி, அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிக்க முழு மூச்சில் இறங்கி இருக்கிறார். இதற்காக நாளை சென்னையில் க்ரோவன் பிளாசா ஹோட்டலில் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் 62 எம்எல்ஏக்களிடம் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தில் கையெழுத்து வாங்கவிருக்கிறார்.
ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று அடுத்தடுத்து தனது பதவிகளை எல்லாம் பிடுங்கிய எடப்பாடி, அடுத்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் தான் கை வைப்பார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ஓபிஎஸ், சபாநாயகர் அப்பாவுக்கு அவசரமாக ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார் . எடப்பாடி தரப்பில் தன்னை நீக்கச் சொல்லி கடிதங்கள் அனுப்பினால், அந்த கடிதங்கள் அல்லாது என்று அதற்குரிய விளக்கங்களுடன் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார் ஓபிஎஸ் .
இந்த நிலையில் நாளை மறுதினம் 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டு போட இருக்கிறார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் . இதற்கு முதல் நாள் 17ஆம் தேதி நாளைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டிய கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தன்னிடம் இருக்கும் 62 எம்எல்ஏக்களை இடம் ஓபிஎஸ் இடம் இருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறித்து விட கையெழுத்து வாங்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டமாக இருக்கிறது.
பசுமைவழிச் சாலையில் உள்ள தனது பங்களாவில் தான் எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதலில் கூட்டியிருந்தார் எடப்பாடி. அரசு பங்களாவில் அரசியல் செய்கிறார் என்று ஓபிஎஸ் தரப்பில் புகார் எழுந்ததால் இந்த கூட்டத்தை க்ரோவன் பிளாசா ஓட்டலுக்கு மாற்றி இருக்கிறார் எடப்பாடி. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டு போடுவது தொடர்பான பயிற்சிக்காக இந்த ஆலோசனை கூட்டம் என்று வெளியே சொன்னாலும் ஓபிஎஸ்க்கு எதிராக 62 எம்எல்ஏக்கள் இடமும் கையெழுத்து வாங்குவது தான் இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்கிறது அதிமுக வட்டாரம் .
எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை நீக்க கோருகிறோம் என்ற தீர்மானத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 63 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்ட பின்னர் இந்த தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வசம் வழங்க திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.