எடப்பாடியின் வீம்பு! அதிமுக அலுவலக ஊழியர்கள் கண்ணீர்
எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போடாமல் பிடிவாதம் பிடிப்பதால் அதிமுக அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் போடாத நிலை இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் . இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கும் அது முடியாத நிலை இருக்கிறது என்கிறார். ஜெயலலிதாவின் இல்லத்தையும் வாங்கலாம் என்று ஓபிஎஸ் சொல்லியும் எடப்பாடி வாங்க மறுத்து விட்டார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருக்கிறார்.
ஓபிஎஸ் ஆதரவாளரும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான ராமச்சந்திரன் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக கட்சித் தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் தொலைபேசியில் பேசினார் ஓபிஎஸ். மாவட்ட செயலாளர் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை தயார் செய்து அனுப்பி விட்டார்களா? அவர்களுக்கு படிவம் கையெழுத்திட்டு விளங்க வேண்டும். அதனால் படிவத்தை அனுப்புங்கள் என்ற சொல்ல, அவர் எடப்பாடி இடம் கேட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார் .
ஆனால் கடைசி வரைக்கும் தகவல் வராததால் மாலையில் ஓபிஎஸ் கடிதத்தை அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தையும் எடப்பாடி திருப்பி அனுப்பி விட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் கையெழுத்திட தயாராக இருந்தும், திமுகவுக்கு துணை போகின்ற வகையில் எடப்பாடியை வழிநடத்தும் கும்பல் படிவத்தில் கையெழுத்திட தயங்கி இருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கட்சி தலைமை அலுவலக ஊழியர் ஒருவர் ஓபிஎஸ் இடம் வந்து, கட்சி அலுவலக ஊழியர்களுக்கும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கும் பொறுப்பு பொருளாளர் இடம் தான் உள்ளது. நீங்கள் கையெழுத்திட்டு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி அனுமதி பெற்று காசோலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அதனால் அதிமுக அலுவலக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் கையெழுத்திட்டு எடப்பாடிக்கு அனுப்பி வைத்தார் ஓபிஎஸ். அதிலும் கையெழுத்து போடாமல் இருப்பதால் அதிமுக அலுவலக ஊழியர்களுக்கு ஊதியத்தை தர முடியாத நிலை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேட்டை வாங்கலாம் என்று ஓபிஎஸ் சொன்னதையும் எடப்பாடி கேட்கவில்லை என்று எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருக்கிறார் ராமச்சந்திரன்.