எடப்பாடி போட்ட முதல் கையெழுத்து! திடீர் பெயர் மாற்றம்

 
எ

எடப்பாடி போட்ட முதல் கையெழுத்தால் ஓபிஎஸ் நாற்காலியில் உட்கார்ந்தார் திண்டுக்கல் சீனிவாசன்.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பொதுச்செயலாளர் என்ற பதவியை எடுத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கினார்கள் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்.   இந்த இரண்டு பதவிகளையும் காலி செய்து விட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்து,  தனது ஒற்றை தலைமையின் கீழ் அதிமுகவைக் கொண்டு வந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.  அவர் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் செய்த முதல் காரியமே,  ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவை விட்டு கூண்டோடு நீக்கம் செய்ததுதான்.  

ஒ

இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதும் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்ட முதல் அறிவிப்பாக வந்தது  திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்ற அறிவிப்பு.  

ஒருங்கிணைப்பாளர் பதவியை பறித்துவிட்டாலும் கூட, பொருளாளர் பதவியை வைத்தே ஆட்டம் காட்டுகிறாரே என்றுதான் அந்த பதவியை பறித்துவிட திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. அதன்படியே பொதுக்குழுவில்  ஓ . பன்னீர்செல்வத்தின் பொருளாளர்  பதவியை பறித்துவிட்டு, அந்த பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுத்திருக்கிறார்.

ட்

பொதுக்குழுவில் தான் பொதுச்செயலாளர் ஆன பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புகளை யார் யாருக்கு கொடுக்கலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து வைத்திருந்திருந்தார் எடப்பாடி. அதன்படி   ஓ. பன்னீர்செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து அந்தப் பதவியை நத்தம் விஸ்வநாதனுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

ன

  தற்போது எடப்பாடி பழனிச்சாமி வகித்து வரும் தலைமை நிலைய செயலாளர் பதவி சிவி சண்முகத்திற்கும்,  டி. ஜெயக்குமார் துணைப் பொதுச் செயலாளர் என்றும்,  நத்தம் விஸ்வநாதன் பொருளாளர் என்றும் ,   தமிழ் மகன் உசேன் அவை தலைவர் என்றும் ,  எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சித் தலைவர்  என்றும், திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றும்  முடிவு செய்யப்பட்டு இருந்தது. 

ல்

 இந்த புதிய பொறுப்புகள் சில மாதங்களுக்கு மட்டுமே என்றும் ,  சில மாதங்களுக்கு பின்னர் பொறுப்புகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டிருந்தது. இதில்,  நத்தத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால்,  நத்தம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆவார் என்று தெரிகிறது.

திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே  பொருளாளர் பதவியில் இருந்துள்ளார் என்கிற வகையில் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.