எடப்பாடி உயிருக்கு அச்சுறுத்தல்! உச்சபட்ச பாதுகாப்பு கேட்டு மனு

 
ஏ

 எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. 

 அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாக வெடித்ததை அடுத்து ஓ . பன்னீர்செல்வத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் ஓரங்கட்டினர்.  இதனால் வெகுண்டு எழுந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.   இதற்கிடையில் அதிமுகவில்  இடைக்கால பொதுச்செயலாளர் என்று தன்னை அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.   இதனால் அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்து இருப்பதால் தொண்டர்களின் ஆதரவு திரட்டுவதற்காக ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.   குறிப்பாக தென் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை கவனத்துடன் மேற்கொள்ள இருக்கிறார்.

ட்

 இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து தனக்கு ஆதரவை திரட்ட இருக்கிறார். தென் மாவட்டங்களில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள் தான்,  அவர்களின் சமூகத்தினர் தான் அதிகம் உள்ளனர்.  இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். 

 சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.   சுதந்திர தினத்திற்கு பின்னர் இந்த சுற்று பயணத்தை தொடங்க இருக்கிறார் .  நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் அதன் பின்னர் மதுரை, தேனி மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்.

 இந்த சுற்றுப்பயணத்தின் போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களால் தனக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள்.   இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஏ

 சேலத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன் இந்த புகார் மனு அளித்துள்ளார்.  அந்த மனுவில்,  ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின்னர் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.    மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  5 மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இருக்கிறார்.  அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டு வருகிறது.  இந்த நிலையில் தென் மாவட்ட பயணத்தின் போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களாலும் மற்ற சமூக விரோதிகளாலும் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.  அதனால் முன்னாள் முதலமைச்சராகவும் தற்போது எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு  போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.  அவருக்கு பாதுகாப்பு அதிகரித்து உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 டிஜிபி அலுவலகத்தில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணத்தின் போது அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.