பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த எடப்பாடி ஏற்பாடு

 
ee

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் என்று தகவல்.   சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால் அந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி.

 அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முழுவதுமாக தனது செல்வாக்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் . ஓபிஎஸ் எடுத்த முயற்சிகள் எல்லாம் தொடர் தோல்விகளாக போய்விட்டதால் எடப்பாடி ஏணி மேல் ஏறிக்கொண்டே செல்கிறார்.  

ee

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டிக்கொண்டார் .  இதன் பின்னர் பொதுச் செயலாளராக அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தலை நடத்த வேண்டும்.  அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார் எடப்பாடி.  பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக  இருப்பதாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திலும் மனுவை தாக்கல் செய்திருக்கிறார் எடப்பாடி.

 இதை அடுத்து தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி இருக்கிறார். தற்போதைய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தடையும் இல்லை.  இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த எடப்பாடி திட்டமிட்டு இருக்கிறார்.  இதனால் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி என்கிறார்கள்.