சாரை சாரையாக வரும் இபிஎஸ் ஆதரவாளர்கள் - திருவிழா கோலம் காணும் கிரீன்வேஸ் சாலை

 
e

 அதிமுக பொதுக்குழு வற்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால் பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.   அதிமுகவில் தற்போது இருக்கும் இரட்டை தலைமையை மாற்றி தனக்கு இருக்கும்  பெரும்பான்மை ஆதரவாளர்களை வைத்து ஒற்றைத் தலைமையை கொண்டு வந்து தான் பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்.  அதிமுகவின் 75 மாவட்ட செயலாளர்களில் 61 பேர் அவருக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.  

அதிமுகவில் தற்போது இருக்கும் இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை வேண்டும் என்கிற எடப்பாடி கோரிக்கைக்கு  ஓ .பன்னீர்செல்வம் சமரசம் ஆகவில்லை.  தம்பிதுரை எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசிப் பார்த்தும் செங்கோட்டையன் இரண்டு முறை சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஓபிஎஸ் சமரசம் ஆகவில்லை.  

e

ஒற்றைத்லைமை விவகாரம் எழுந்தது முதல் இபிஎஸ்- ஓபிஎஸ்  இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  இன்று 6வது நாளாக அந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.  இதனால் ஓபிஎஸ்,  இபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் குவிய தொடங்கி இருக்கிறார்கள். 

 பொதுக்குழுவுக்கு இன்னும் மூன்று தினங்கள் தான் இருக்கும் நிலையில் இப்போதே இருவரின் ஆதரவாளர்களும் சென்னையில் குவிய தொடங்கிவிட்டார்கள்.  இதில் இபிஎஸ்  வீட்டில்தான் அதிமுகவின் அனைத்து நிர்வாகிகள் அதிகம் திரண்டு வருகிறார்கள்.  

 எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு ஆதரவாளர்கள் சாரை சாரையாக வந்து செல்கின்றனர்.  எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவபதி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சுனில் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித் திருக்கிறார்கள்.  இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வேடசந்தூர் பரமசிவம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர் . 

தேனி மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.   தேனி மாவட்ட நிர்வாகிகள் திரண்டுவந்து எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அனைத்து தலைவர்களும் எடப்பாடியை சந்திக்க திரண்டு வந்ததால் அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதி திருவிழா கோலமாக காணப்பட்டது. 

பொதுக்குழுவிற்கு முன்னதாகவே அதிமுகவில் எடப்பாடிக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர் என்கிறது அதிமுக வட்டாரம்.