ஓபிஎஸ் கடிதத்தை வாங்க ஈபிஎஸ் மறுப்பு

 
ep

அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள மகாலிங்கம் மூலம் ஈபிஎஸ்க்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பிய கடிதத்தை இபிஎஸ் வாங்க மறுத்ததால் அந்த கடிதம் மீண்டும் ஓபிஎஸ் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Will BJP intervene in AIADMK saga and help OPS? | Deccan Herald

இந்நிலையில் ஓபிஎஸ்- ஐ அவரது இல்லத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன்,  “உள்ளாட்சியில் உள்ள காலிங்களுக்கு மனுதாக்கல் தொடங்க பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணையொருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிடமுடியும். நாளை மாலை 3 மணிக்குள்  கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஃபார்ம் A மற்றும் பார்ம் B கட்சி சார்பில் வணங்கினால் மட்டுமே அதிமுக சின்னம் ஒதுக்கப்படும்.

அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும். ஆகவே உள்ளாட்சி காலி இடங்களின் வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் வேட்பாளருக்காக கை எழுத்து போட நான் தயார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் கை எழுத்து போடுவார் என நம்பியிருந்த நிலையில், திருப்பி அனுப்பிவிட்டார்” எனக் கூறினார்.