ஓபிஎஸ் நாற்காலியை உதயகுமாருக்கு வாங்கித்தர போராடும் இபிஎஸ்

 
e

ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக  பன்னீர்செல்வம் அணி, பழனிச்சாமி அணி என்று இரண்டாக பிரிந்தது.   ஆனாலும் தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தான் என்றும்,  சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தான்தான் என்றும் சொல்லி வருகிறார் பன்னீர்செல்வம். 

 பழனிச்சாமியோ அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தான் என்றும்,  அதிமுகவின் மொத்த அதிகாரமும் தனக்குத்தான் இருக்கிறது என்றும் சொல்லி,  எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்தார்.  ஆனால் இந்த நியமனத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளவில்லை.

ap

 கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆர்பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை  பழனிச்சாமி தரப்பில் விடுக்கப்பட்டது.   பலமுறை சபாநாயகர் அப்பாவுக்கு இது தொடர்பாக கடிதங்களும் அனுப்பி வந்தனர்.  ஆனால் அப்பாவு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பன்னீர்செல்வத்திற்குத் தான் அனுமதி வழங்கியிருந்தார்.

பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும்தான் அருகருகே அமர்ந்திருந்தனர்.  இந்த முறையும் அதே நிலை தொடர்கிறது.   இந்த நிலையில் தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க சபாநாயகரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

  பழனிச்சாமி தலைமையில் சென்னையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.    பழனிச்சாமி இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்திக்கிறார்.   சந்திப்புக்கு பின்னர் அப்பாவு ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முடிவு எடுக்க விட்டால் சபாநாயகருக்கு எதிராக குரல் எழுப்ப பழனிச்சாமி ஆதரவு எம் எல் ஏக்கள் திட்டமிட்டுள்ளனர் என்கிற தகவல் பரவுகிறது.