அதிமுக தலைமை நிலைய செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி
Sun, 26 Jun 20221656256743390

ஓ.பி.எஸ் தேனி சென்றுவிட்ட நிலையில் நாளை எடப்பாடி தரப்பு அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் இல்லாமல் அதிமுக தலைமை நிலைய செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமியின் பொறுப்பு போடப்பட்டு நிர்வாகிகள் கூட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அதிமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாளை காலை 10 மணிக்கு தலைமைக்கழகம்- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.