மாறும் பவர்புல் இலாகா! உதயநிதிக்கு அமைச்சர் பதவி! புதுமுகங்கள், பெண்களுக்கு வாய்ப்பு

 
u

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும் அப்போது புதிய அமைச்சரவையில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவியும்,  மேலும் புதியவர்கள் மற்றும் பெண்கள் சிலருக்கு அமைச்சர் பதவிவழங்கு இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.  சில அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா ஒதுக்க இருப்பதாகவும்,  அதே நேரம் துறை ரீதியாக சரி வர செயல்படாத அமைச்சர்களுக்கு இலாகா பறிப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட இருப்பதாக தகவல். கோஷ்டி பூசலை உருவாக்கும் பிடிஆர் போன்றவர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

uu

 டிசம்பர் மாத இறுதியில் இந்த புதிய அமைச்சரவை அமைய இருக்கிறது அல்லது ஜனவரி மாதம் முன்பகுதியில் புதிய அமைச்சரவை நடைபெற இருக்கிறது என்றும் சரிவர செயல்படாமல் இருக்கும் அமைச்சர்களின் பதவியை பறித்து விட்டு அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத இலாகா ஒதுக்கிவிட்டு,  புதுமுகங்களுக்கும் பெண்களுக்கும்  வாய்ப்பு வழக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்மானித்திருக்கிறார் என்று தகவல் பரவுகிறது.

 கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ .பெரியசாமி சரிவர இயங்கவில்லை என்று புகார் சொல்லி கட்சிக்குள் சலசலப்பை  ஏற்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் தியாகராஜன். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பெரியசாமி,   ராஜினாமா செய்து விடலாமா என்று புலம்பி வருகிறாராம்.  இப்படி கட்சிக்குள் கட்சி பூசலை ஏற்படுத்தும் பிடிஆரின் நிதி அமைச்சர் இலாகாவை  அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றி கொடுப்பதற்கு முதல்வர் ஆலோசித்து வருகிறார். 

p

 அதேபோல் பால்வளத்துறை அமைச்சர் நாசர்,  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் இருக்கின்ற இலாகாக்களும் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்கிற செய்தி பரவுகிறது.  கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த  அமைச்சரிடம் இருக்கும் பவர்ஃபுல் இலாகாவும் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.