மதியம் வீராவேசம் - இரவில் சரண்! டாக்டர் சரவணன் அடித்த அந்தர்பல்டி -பாஜகவில் இருந்து விலகினார்

 
sa

 நடிகரும்,  பிரபல டாக்டரும்,  மதுரை மாவட்ட பாஜக தலைவருமான சரவணன் நேற்று நள்ளிரவில் திடீரென்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் நேற்று மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்துள்ள நிலையில் இரவில் அவரிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

  மதுரையில் பிரபல மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் சரவணன் சில திரைப்படங்களில் நடித்து வந்தவர்,  மதிமுகவில் நீண்ட காலம் இருந்து வந்தார்.  திடீரென்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.  ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்று நீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்ததால் அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவித்தது நீதிமன்றம்.

sa

 இதை அடுத்து நடந்த மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டாக்டர் சரவணன் திமுக சார்பில் போட்டியிட்டு திமுக எம்எல்ஏ ஆனார்.  அதன் பின்னர் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மீண்டும் திமுக வாய்ப்பு வழங்காததால் அந்த அதிருப்தியில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார்.  அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். 

 இதன் பின்னர் பாஜகவில் தீவிரமாக இயங்கி வந்தவர்,  கட கடந்த சில மாதங்களாகவே அவர் திமுகவுக்கு மீண்டும் தாவ இருக்கிறார் என்ற செய்தி பரவி வந்த நிலையில் கடந்த 29. 6 .2022-ல் நான் பாஜக கட்சியில் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலும் மதுரையில் எனது தலைமையிலும் பாஜக அபார வளர்ச்சி பற்றி வருகிறது .  இந்த நிலையில் யாரும் வீண் புரளியை ஏற்படுத்தி வருகின்றனர் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

s

 இந்த நிலையில் நேற்று மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்திற்கு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தபோது அங்கே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் திரண்டு நின்றனர்.  இவர்களையெல்லாம் யார் உள்ளே விட்டது . இவர்களுக்கு இங்கே என்ன இங்கே வர என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் பி டி ஆர் எகிறி குதித்ததால் ,  ஆவேசம் அடைந்த பாஜகவினர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு பிடிஆர் திரும்பும் போது அவர் காரை வழிமறித்து அவர் காரின் மீது செருப்பு வீசினர்.  இது பெரும் சர்ச்சையில் ஏற்படுத்தியது.

as

 இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன்,   எங்களை பார்த்து என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்.  முதலில் அமைச்சர் பி டி ஆருக்கு என்ன தகுதி இருக்கிறது?அவர் மட்டும் பாஜகவினரை பார்த்து கையை ஓங்கி இருந்தால் பிரச்சனை வேறு மாதிரி ஆகி இருக்கும் என்று கடுமையாக எச்சரித்து இருந்தார். மதியம் அவர் இவ்வாறு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து இருந்த நிலையில் நள்ளிரவில் என்ன நடந்தது தெரியவில்லை திடீரென்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

 எனக்கு வெறுப்பு அரசியல் மத அரசியல் ஒத்துவரவில்லை.  என் மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் சொல்லி நான் பாஜக கட்சியில் தொடரவில்லை.  பாஜகவில் நான் தொடர போவதில்லை.  ராஜினாமா கடிதத்தை கொடுத்து சுயமரியாதை உடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.