திமுக எம்.பியின் இரட்டை வேட நாடகம் - அம்பலப்படுத்திய பாஜக

 
mp

ஒரே நாளில் இரண்டு இடங்களில் இந்து மத முறைபடி பூஜை நடந்ததில் ஒரு பூஜையை தொடங்கி வைத்த திமுக எம்பி செந்தில்குமார், இன்னொரு பூஜையில் ஆவேசமாக சத்தம் போட்டு பூஜையை நிறுத்தி அர்ச்சகரை அங்கிருந்து வெளியேற்றினார்.  திமுக எம்.பி. செந்தில்குமாரின் இந்த இரட்டை வேட நாடகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது பாஜக.

na

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரியில்  மத்திய , மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கின.   அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் அழைக்கப்பட்டு இருந்தார்.   அந்த நிகழ்ச்சிக்கு  சென்ற எம். பி. செந்தில்குமார்,  அங்கே பணியை தொடங்குவதற்கு முன்பாக இந்து மத முறைப்படி நடந்த பூமி பூஜையை கண்டித்தார். பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு அர்ச்சகரை வெளியேற்றினார். அதிகாரிகளை கடுமையாக திட்டினார்.

se

இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’ஓரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறுபிள்ளைத்தனமான செயல். பூஜை செய்வது என்பது பணியாற்றுபவர்களின் நம்பிக்கைகாக. அரசுக்காக அல்ல. பூஜையில் தி க வினர் எங்கே என்று கேட்பது வன்மத்தின் வெளிப்பாடு. அந்த அதிகாரி ஒரு இஸ்லாமியராக இருந்திருந்து, பணி தொடங்கும் முன் இஸ்லாமிய வழக்கப்படி தொழுதிருந்தால் கண்டித்திருப்பாரா? தைரியம் இருந்திருக்குமா? ஓவ்வொரு மதத்திலும் வழிபாட்டு முறைகள் மாறுபடும் என்ற பொது அறிவு உள்ளவர்கள், இது போன்று தகாத முறையில், அநாகரீகமாக நடந்து கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்கு  இந்த நபர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்க மறுத்தால், மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றே கருதப்படுவார்.  மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின் பொறுப்பற்ற, முறையற்ற, நிதானமில்லாத, அநாகரீக பேச்சு, திமுக ஹிந்து விரோத கட்சி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது’’ என்கிறார்.

ss

மேலும்,  ‘’இமாம்கள் எங்கே? பாதிரியார் எங்கே? திராவிடர் கழகத்தினர் எங்கே? அவர்கள் அனைவரும் இல்லாமல் ஹிந்து மத வழக்கப்படி மட்டும் பூஜை போடுவது சரியா? என்று கேட்கிறார் திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார். மசூதிகள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? திகவின் சொத்துக்கள் எங்கே? அவைகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் ஹிந்து கோவில்களை மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சரியா? என கேட்பாரா  செந்தில்குமார்?’’ என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார் நாராயணன்.

se

மேலும்,  திமுக எம்பி செந்தில்குமார் போட்ட இரட்டை வேட நாடகத்தையும் அவர் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

செய்தி 1: நேற்று செக்கானூரில் நடைபெற்ற சாலை பணி துவக்க விழாவில், பூஜையை துவக்கி வைக்கிறார் தர்மபுரி மக்களவை உறுப்பினர் 
செந்தில்குமார்.

செய்தி 2 : நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள  ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி துவக்க விழாவில் பூஜை நடத்தக்கூடாது என்று  தடுக்கிறார். ஒரே நாளில் செக்கானூரில் பூஜை செய்தால் ஏற்றுக்கொள்ளும் இவர் ஆலாபுரத்தில் பூஜை செய்ய தடுத்தது ஏன்? 

இந்த நாடகத்தை அரங்கேற்றியதன்  மர்மம் என்ன? பின்னணியில் யார்? இது தான் திராவிட மாடலா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாராயணன்.