திமுகவுக்கு குட்டு வைத்த தலைமை நீதிபதி

 
sst

 திமுக மட்டும் மிகவும் புத்திசாலித்தனமான சாதுர்ய மான  கட்சி என்று கருதி விட வேண்டாம் பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் அது குறித்து அறியாமல் இல்லை.  திமுக மட்டும் அறிவார்ந்த கட்சி என நினைக்க வேண்டாம் என்று திமுக வழக்கறிஞருக்கு குட்டு வைத்திருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா.

தேர்தலின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கின்ற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இது தொடர்பாக திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்திருக்கும்  அறிக்கையில்,    அரசியல்   நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த மனுவை  தாக்கல் செய்தவர் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தோற்ற கட்சியை சேர்ந்தவர்.    அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக  செயல்படுத்தப்படும்  திட்டங்களை இலவசங்கள் என்று கருத முடியாது.  அதனால் இந்த மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டுமென்று  கூறப்பட்டிருந்தது.

su

 இந்த வழக்கு இன்றைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், எது இலவசம் எது நலத்திட்டம் என்பதில் வரையறை தேவை.  இலவசம் வழங்குவது என்பது முக்கியமான பிரச்சனை.  இது குறித்த விவாதம் தேவை.   நாட்டின் நலனுக்காக இந்த பிரச்சனையை கேட்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.    இலவசங்கள் தொடர்பான விவகாரம் சிக்கலான ஒரு பிரச்சனை என்றார்.

மேலும்,   தேர்தல் வாக்குறுதியோடு மட்டும் இதை பார்க்காமல் மற்ற முக்கியமான விஷயங்கள் குறித்தும் பார்க்க வேண்டும்.   கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவது,  அவர்கள் கல்வி கற்று நன்மை அடையவே.   பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு கால்நடைகள் வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம்  ஏற்படுத்தவே.  

கிராமப்புறங்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு இலவசங்கள் மிக முக்கியமானதாக இருக்கிறது.   இது போன்ற திட்டங்களை கண்முடித்தனமாக இலவசங்கள் என்று சொல்லவில்லை.  இலவசங்கள் வேண்டாம் என்று நினைத்தால் அதனை தடுக்க மத்திய அரசே சட்டம் இயற்றலாம் என்று தெரிவித்தது. 

இதன்பின்னர் திமுக வழக்கறிஞர் வில்சனை பார்த்து தலைமை நீதிபதி,    திமுக மட்டும்  மிகவும் புத்திசாலித்தனமான, அறிவார்ந்த கட்சி என்று கருதிவிட வேண்டாம் .  பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் அது குறித்து அறியாமல் இல்லை என்று குட்டு வைத்தார்.