குடிகாரனுக்கு பொண்ணை கொடுக்காதீங்க - மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

 
ko

 குடிகார ஆண்களுக்கு உங்கள் மகள்களையும், தங்கைகளையும் கொடுக்க வேண்டாம்.  அப்படி திருமணம் செய்து வைத்தால் விதவை ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. இதற்குள் என் மகளும் மருமகனுமே உதாரணமாக இருக்கிறார்கள் என்று உருக்கமுடன் பேசியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் கௌசல் கிஷோர்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் இலம்புவா சட்டமன்றத் தொகுதியில் நடந்த போதை ஒழிப்பு குறித்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கௌசல் கிஷோர் பங்கேற்றார். 

 நிகழ்ச்சியில் அவர் பேசிய போது,  குடிப்பழக்கம் எப்படி தனது மகனை கொன்றது என்பது குறித்து நினைவு கூர்ந்தார்.

fff

 என் மகனுக்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் வழக்கம் இருந்திருக்கிறது.  ஆகாஷ் கிஷோருக்கு மதுப்பழக்கம் அதிகமானதும் அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தோம்.  ஆறு மாதங்களுக்கு பின்னர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அந்த நம்பிக்கையில் அவருக்கு திருமணம் செய்து வைத்தோம்.   ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவர் மதுப்பழக்கத்தை தொடங்கி இருக்கிறார்.

 இதனால் என் மகனின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் உயிரிழந்து விட்டார்.  இறந்த போது அவரது மகனுக்கு இரண்டு வயது தான். நான் எம்பியாக இருந்தும் , மனைவி எம்.எல்.ஏவாகக இருந்தும் என் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  பின்பு சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்.  இதனால் என் மருமகள் விதவையாக நிற்கிறார் . அதனால் தான் சொல்கிறேன் உங்கள் மகள்களை சகோதரிகளையோ நீங்கள் காப்பாற்ற வேண்டும்.  அதற்காக குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு திருமணம் செய்து  கொடுத்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.  

குடிப்பழக்கம் கொண்டவர்களின் ஆயுட்காலம் மிகக் குறைவு . ஒரு நபர் தொடர்ந்து குடி பழக்கத்தில் ஈடுபடும் போது அது பிரச்சனைக்குரிய எதிர்மறையான உடல்நல விளைவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்று கூறியிருந்தார். 

 போதை ஒழிப்பு பிரச்சாரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.