ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு நேரம் ஒதுக்குகிறாரா அமித்ஷா

 
ஒ

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 11. 10 மணிக்கு தனி விமான மூலம் சென்னை வருகிறார்.  நாளை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.   இதற்காக அவர் சென்னை வருகை தருகிறார்.

 சென்னையில் ஆர்.ஏ. புரத்தில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார்.   நாளை காலை 10:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.55க்கு விழா நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு செல்கிறார்.  

ல்

 சென்னை வரும் அமித்ஷா பாஜக குழு நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த இருக்கிறார் . அமித்ஷா கார் செல்லும் காமராஜர் சாலை, வாலாஜா சாலை முழுவதும் பாஜக தொண்டர்கள் வரிசையாக நின்று அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 சென்னையில் அமித்ஷாவை சந்திக்க முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் தனித்தனியாக அனுமதி கேட்டு இருக்கிறார்கள் .இருவருக்கும் தனித்தனியாக சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்குவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 ஒரு வேளை மரியாதை நிமித்தமாக இருவரையும் சந்திக்க அமித்ஷா அனுமதி அளித்தால், அப்போது அதிமுகவின் ஒற்றுமை குறித்து குறிப்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரின் ஒற்றுமை குறித்து வலியுறுத்துவார் என்று தெரிகிறது. 

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திலும்  கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமித்ஷா,  தமிழ்நாட்டிலும் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்ய அவ்வப்போது முயன்று வருகிறார்.   அதிமுகவின் மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் அதிமுகவிலிருந்து பிளவு பட்டு நிற்பவர்களை ஒன்று சேரச் சொல்லி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

 சென்னையில் நாளை நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.