கூவத்தூரில் என்ன நடந்தது தெரியுமா? சசிகலா யாரை முதலில் முதல்வராக அறிவித்தார் தெரியுமா? போட்டுடைக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்

 
es

 ஒற்றைத் தலைமை மோதல் எழுந்ததை அடுத்து ஓபிஎஸ் அணி,  ஈபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டாக பிரிந்து இரு தரப்பில் இருந்தும் ஒருவரை மாற்றி ஒருவர் தூற்றி வாரிக் கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் விதமாக அதிமுக பொதுக்குழு செல்லாது என்று வந்த உத்தரவை அடுத்து எல்லோரும்  ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.   ஆனால் எடப்பாடி அந்த அழைப்பை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் ஓபிஎஸ்ஐ கடுமையாக விமர்சித்து கிண்டலடித்தார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

eeee

 தேனி மாவட்டத்தில் பெரிய குளத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஓபிஎஸ்.   இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தேனி மாவட்ட அதிமுக செயலாளரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை, பண ஆசை பிடித்தவர்.  சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றுக் கொண்டு சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் என்று விளாசி எடுத்தார்.

ச்ய்

 தொடர்ந்து பேசிய அவர் , கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடந்தது தெரியுமா? சசிகலா முதலில் யாரை முதல்வராக அறிவித்தார் தெரியுமா? என்ற கேள்வி எழுப்பி அவரே அதற்கு பதிலையும் சொன்னார்.   கூவத்தூர் ரிசாட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது அடுத்து யாரை முதல்வர் ஆக்கலாம் என்று சசிகலா ஆலோசித்த போது அதிமுக மூத்த நிர்வாகியின் மூத்த அமைச்சருமான செங்கோட்டையனைத் தான் சசிகலா முதல்வராக தேர்வு செய்தார்.  ஆனால் சில காரணங்களால் செங்கோட்டையன் அந்த பொறுப்பை ஏற்காததால் அடுத்து தானாக முன்வந்து ஏற்பதாக நின்றார் இபிஎஸ்.   அதனால் சசிகலா அவரை தேர்வு செய்தார் என்று சொன்ன சையதுகான்,   ஓபிஎஸ்ஐ பசுந்தோல் போர்த்திய புலி என்று சொல்கிறார் ராஜன் செல்லப்பா. பல கட்சி மாறி வந்தவர். கட்சிக்கு துரோகம் செய்தவர் ராஜன் செல்லப்பா.  ஓபிஎஸ் பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை என்று ஆவேசப்பட்டார்.