பாஜகவினர் வீட்டில் அக்கா, தம்பி இப்படித்தான் பேசுவார்களா?

 
b
JP'shouse

பாஜக நிர்வாகிகள் சூர்யா சிவாவும் டெய்சி சரணும் பேசிக்கொள்ளும் ஆடியோதான் கடந்த  இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்தன.  காது கூசும் அளவுக்கு டெய்சி சரணை வருத்தெடுத்த சூர்யா சிவா  வீடியோவை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,  பாஜகவின் நிர்வாகியான காயத்ரி ரகுராம் ஆத்திரமடைந்து இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்.  குரல் அச்சுறுத்தலை கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை ..என் ஆறுதல் ஆதரவு என்று கூறியிருந்தார்.

d

 உட்கட்சி விவகாரத்தை வெளி ஆட்கள் விமர்சித்து வந்த நிலையில் கட்சிக்குள் இருந்தே காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து இருந்ததால் தலைமை அதிரடி முடிவெடுத்து காயத்ரி ரகுராமை ஆறு மாதங்களுக்கு கட்சியை விட்டு நீக்கம் செய்து அறிவித்துள்ளது .  ஆனாலும் சம்பந்தப்பட்ட சூர்யா சிவாவை நீக்காமல் கேள்வி கேட்ட காயத்ரி ரகுராமை நீக்கியது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். 

 இந்த நிலையில் சூர்யா சிவாவையும் ஆறு மாதங்களுக்கு கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை.  இதற்கிடையில் சூர்யா சிவாவும் டெய்சி சரணும் தங்களுக்குள் சுமூகமான முடிவு ஏற்பட்டு விட்டதாக சொல்லி செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். 

 சூர்யா எனக்கு தம்பி மாதிரி.  இருவரும் பரஸ்பரம் சமூகமாக பேசி பிரச்சனையை முடிவெடுத்து இருக்கிறோம். இதனை பெரிதுபடுத்த வேண்டும்.  இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசினார். இனிமேல் இதுபோல் நடக்க கூடாது என என்னிடம் அண்ணாமலை உறுதி வாங்கிக்கொண்டார். முறையாக கூப்பிட்டு விசாரித்தனர். மற்ற கட்சியில் உள்ள தலைவர்களும் இதுபோன்று பேசி உள்ளனர். இது ஒன்றும் புதிது இல்ல என்று கூறி இருக்கிறார்.

  இதை கேட்டு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   உங்க வீட்டில் அக்கா தம்பி இப்படித்தான் பேசுவீர்களா? பாஜகவினர் வீட்டில்  உறவுமுறைகளை இப்படித்தான் பாஜகவும் பார்க்கிறதா என்று விமர்சித்து வருகின்றனர்.