ஓபிஎஸ்சிடம் மறைமுகமாக பேசிவரும் மா.செ.க்கள்

 
க்ரி

 ஓபிஎஸ் ஆதரவாளர்களில் முக்கியமானவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.   வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளராக இருக்கும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழுவுக்கு முன்தினம் மாலையில் பொதுக்குழு கூட்ட அரங்கத்தை பேரணியாகச் சென்று பார்வையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.   ஓபிஎஸ்க்கு பக்கபலமாக நின்று கொண்டிருக்கிறார்.  

எட்

 அவர் தற்போதைய அதிமுக விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,    அதிக அளவில் ஆட்களைப் பிடித்து விட்டால் ஓபிஎஸ் வரமாட்டார் என்று கணக்கு போட்டார்கள்.   ஆனால் தனியாக வந்து தனது ஆளுமையை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.     அணி பிரிந்த காலத்தில் அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எத்தனை பேர் வந்து காலில் விழுந்தார்கள் என்று எனக்கு தெரியும்.   ஆதாயம் வேண்டும் என்பதற்காக பொதுக்குழு, செயற்குழு நடந்த பகுதியில் இருந்த பேனர்களை எல்லாம் கிழித்தார்கள்.  எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டனும் ஜெயலலிதா படத்தையும், எம்ஜிஆர் படத்தையும் கிழிக்க மாட்டார்கள். அதையும் இவர்கள் செய்து காண்பித்திருக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டார்.

 ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தலைவராக வரட்டும்.  அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு மாபெரும் தலைவரை பொதுக்குழு செயற்குழுவில் அழைத்து எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அவரது ஆதரவாளர்கள் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்.  

க்ர்

 நடந்த பொதுக்குழு செயற்குழு செல்லாது என்று சொன்னால் அவைத்தலைவர் பதவியும் செல்லாது தானே?  அப்படி இருக்கும்போது மீண்டும் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் கூட்ட முடியாது என்றார்.   அதிகார அழுத்தம் மன அழுத்தத்தினால் தான் மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் உடன் சென்றிருக்கிறார்கள்.   ஆனால் பொதுக்குழு, செயற்குழு முடிந்த பின்னர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் ஓபிஎஸ்சிடம் மறைமுகமாக பேசி வருகிறார்கள்.   ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்ட முடியாது முடிந்தால்.. ஓரங்கட்டி பார்க்கட்டும் என்று ஆவேசமானார்.

அவர் மேலும்,   எடப்பாடி பழனிச்சாமியே  அவரது கட்டுப்பாட்டில் இல்லை.  அவரை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள்.  இபிஎஸ் -ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டு பேரும் ஒன்றுபட்டு உட்கார்ந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.