துரை வைகோ பேச்சு - கடுப்பான காங்., எம்பி

 
d

மதிமுகவின் தலைமை நிலைய கழகச் செயலாளர் துரை வைகோவின் பேச்சு விருதுநகர் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.  குறிப்பாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தலைவர் கடுப்பாகி இருக்கிறார். 

 விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்.   இவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராக உள்ளார் என்கிறது காங்கிரஸ்  வட்டாரம்.  திமுகவுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி எம்பிக்களில் முதன்மையானதாகவும் இருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

ma

 இந்த நிலையில் அண்மையில் சிவகாசியில் நடந்த மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரை வைகோ,   வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட எங்களுக்கு ஸ்டாலின் வாய்ப்பு தர வேண்டும்.   வைகோ எம்பி ஆக இருந்தபோது விருதுநகருக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அதேபோல் நானும் செயல்பட வாய்ப்பு தர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

 துரை வைகோ  பேசியதை கேள்விப்பட்ட விருதுநகர் காங்கிரசார் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மாணிக்கம் தாகூர் கடுப்பாகி  விட்டாராம்.   மதிமுகவுக்கு சீட்’டுக்கு துரைவைகோ துண்டு போட்ட விவரத்தை ராகுல்காந்தி காதுக்கு கொண்டு போகப் போகிறாராம் மாணிக்கம் தாகூர்.  

ஒரே தொகுதிக்கு இரண்டு கட்சிகள் இப்போதே போட்டி போட ஆரம்பித்துவிட்டதால் திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் குழப்பம்- களேபரம் ஏற்படிம் என்ற சலசலப்பு அக்கட்சிகளுக்குள் எழுந்திருக்கிறது.