இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டையும் மம்தா பானர்ஜி கெடுக்கிறார்.. திலீப் கோஷ் குற்றச்சாட்டு

 
திலிப் கோஷ்

இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டையும் மம்தா பானர்ஜி கெடுக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் திலீப் கோஷ் குற்றம் சாட்டினார்.

தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், எம்.பி.யுமான திலீப் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் திலீப் கோஷ் பேசுகையில் கூறியதாவது: பிற மதத்தை மதியுங்கள், உங்கள் மதத்தை பின்பற்றுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இங்கே நாம் அதற்கு எதிர்மறையாக பார்க்கிறோம். 

மம்தா பானர்ஜி

நமது முதல்வர் (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி) ஒரு இந்து பிராமண குடும்பத்தை சேர்ந்தவர், ஆனால் அவர் நமாஸ் செய்கிறார் மற்றும் விரதம் (நோன்பு) இருக்கிறார். சில சமயங்களில் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு இப்தார் பார்ட்டிகளுக்கு செல்வார். இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டையும் இப்படி கெடுக்கிறார். 

நுபுர் சர்மா

நுபுர் சர்மா சொன்னது தவறு என்று நீங்கள் (வன்முறையில் ஈடுபட்டவர்கள்) நினைத்தால், வந்து வாதிடுங்கள், உங்கள் தர்க்கத்தை பொதுவில், தொலைக்காட்சியில் கொடுங்கள். தர்க்கத்திற்கு பதிலாக நீங்கள் வாளை எடுக்கிறீர்கள். காலங்காலமாக ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் இந்து மதத்தின் மீதான நம்பிக்கை இன்னும் நாட்டில் உள்ள 100 கோடி இந்துக்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.