இந்திய அரசியலமைப்பை அவர்கள் நம்புகிறார்களா என்பதை பா.ஜ.க. தெளிவுப்படுத்த வேண்டும்... திக்விஜய சிங்

 
2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

இந்திய அரசியலமைப்பை அவர்கள் நம்புகிறார்களா என்பதை பா.ஜ.க. தெளிவுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய சிங் வலியுறுத்தினார்.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திக்விஜய சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவர்களும் (பா.ஜ.க.) அதை (யாத்திரை) செய்யத் தொடங்கி விட்டனர். அவர்கள் இந்து தேசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. இதன் அர்த்தம் அவர்களுக்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை, பிறகு ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார்கள், ஏன் சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள்? இந்த இருமுக அறிக்கைகள் நன்றாக இல்லை. 

பா.ஜ.க.

இந்திய அரசியலமைப்பை அவர்கள் நம்புகிறார்களா என்பதை பா.ஜ.க. தெளிவுப்படுத்த வேண்டும். அவர்கள் நம்பவில்லை என்றால், அதனுடன் முன்வர வேண்டும். இந்த யாத்திரை காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மோகன் பகவத் மசூதிக்கு வருவார் என்று நாம் எப்போதாவது எதிர்பார்த்தோமா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோகன் பகவத்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று முன்தினம், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை 21ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என்று கூறினார். மேலும், அவர்கள் ஒரு போதும் ஹர ஹர மகாதேவ் மற்றும் ஜெய் சியா ராம் என்று கூறுவதில்லை, ஏனெனில்  அவர்கள் இந்தியாவின் மதிப்புகள் மற்றும் தவத்துக்கு எதிரானவர்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.