நேரு-காந்தி குடும்பம் இல்லையென்றால் காங்கிரஸ் பூஜ்ஜியமே... திக்விஜய சிங்

 
ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

நேரு-காந்தி குடும்பம் இல்லையென்றால் காங்கிரஸ் பூஜ்ஜியமே என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இருக்கும் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். அப்போது திக்விஜய சிங் கூறியதாவது: இந்த கட்சிக்குள் பலமுறை பிளவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் 99 சதவீத காங்கிரஸ்காரர்கள் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தேசத்திற்கு சேவை செய்த குடும்பத்தை ஆதரித்துள்ளனர். 

சோனியா காந்தி குடும்பம்

நேரு-காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸூக்கு அடையாளமே இருக்காது. நேரு-காந்தி குடும்பம் இல்லையென்றால் காங்கிரஸ் பூஜ்ஜியமே. இதுவரை அசோக் கெலாட் எங்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருக்கலாம் என்ற கருதப்பட்டது. அசோக் கெலாட் போட்டியிட்டிருந்தால், நாங்கள் அதை மதித்திருப்போம். அவர் எப்போதும் காங்கிரஸூக்கு விசுவாசமாக  இருந்து வருகிறார். ஆனால் ராஜஸ்தானில் நடந்த அசம்பாவிதம் (அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மிரட்டல்) தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியது, சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

சசி தரூர்

நாங்கள் (திக்விஜய சிங்-சசி தரூர்) இருவரும் காந்திய-நேருவிய சித்தாந்தவாதிகள். எங்களிடம் ஒரு சித்தாந்தம் உள்ளது. நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் காங்கிரஸை வலுப்படுத்த இருவரும் போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். சசி தரூர், திக்விஜய சிங் மற்றும் காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் இன்று தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.